செம்மனூர் கடை திறப்பு விழாக்களுக்கு போயிருக்கேன்.. ஹனி ரோஸ் விவகாரம்.. மரீனா மைக்கேல் சொன்னது என்ன?
திருவனந்தபுரம்: முதல் கனவே, சிங்கம் புலி, மல்லுக்கட்டு, கந்தர்வன் மற்றும் பட்டாம்பூச்சி என பல தமிழ்ப்படங்களில் நடித்துள்ள நடிகை ஹனி ரோஸ் மலையாள சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். திருவனந்தபுரம் லாட்ஜ், ஒன் பை 2, பிக் பிரதர், அக்வாரியம், மான்ஸ்டர், ரேச்சல் உள்ளட்ட பல மலையாள படங்களில் இவர் நடித்துள்ளார்.
திரைப்படங்களில் நடிப்பதை தாண்டி ஹனி ரோஸுக்கு இருக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் காரணமாக பல நகைக்கடை திறப்பு விழாக்களுக்கு வெளிநாடுகளில் நடைபெறும் கடைத் திறப்பு விழா நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் இவரை சிறப்பு விருந்தினராக அடிக்கடி அழைத்து வருகின்றனர்.

செம்மனூர் தங்க நகைக்கடை உரிமையாளரான பாபி செம்மனூரின் கடைகளின் திறப்பு விழாக்களுக்கு சென்று வந்த ஹனி ரோஸ் சமீபத்தில், அந்த தொழிலதிபரின் மீது பாலியல் தொல்லை புகார் கொடுக்க கடந்த புதன்கிழமை அவரை போலீஸார் கைது செய்து 14 நாட்கள் ரிமாண்டில் வைத்துள்ளனர். இந்நிலையில், செம்மனூர் ஜுவல்லரி நகைக்கடை திறப்பு விழாக்களுக்கு பலர் போக வேண்டாம் என எச்சரித்தும் தான் சென்று வந்ததாக மற்றொரு மலையாள நடிகையான மரீனா மைக்கேல் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலையாள திரையுலகில் பாலியல் தொல்லை: கடந்த ஆண்டு மலையாள திரையுலகில் பல நல்ல படங்கள் வெளியாகி பாக்ஸ் ஆபிஸ் ரீதியிலும் வெற்றியை பெற்றன. பிரேமலு, பிரமயுகம், மஞ்சுமெல் பாய்ஸ், ஆவேஷம், ஆடு ஜீவிதம் என வரிசையாக பல படங்கள் ஹிட் அடித்தன. 100 கோடி, 200 கோடி வசூல் வேட்டையையும் மலையாள திரையுலகம் கண்டது. ஆனால், அதே நேரத்தில் மலையாள திரையுலகம் மற்றும் அதன் நடிகர் சங்கமான அம்மா கமிட்டி கூண்டோடு ராஜினாமா செய்யும் அளவுக்கு ஏகப்பட்ட நடிகைகள் முன் வந்து அளித்த பாலியல் புகார்கள் காரணமாக மல்லுவுட்டுக்கு மிகப்பெரிய களங்கமும் உருவானது. ஹேமா கமிட்டி விஸ்வரூபம் எடுத்தது. நிவின் பாலி மீதான பாலியல் புகார் பிரச்சனைக்கு பிறகு அவர் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்ட நிலையில், அந்த சர்ச்சை அப்படியே அடங்கியது. இந்நிலையில், நடிகை ஹனி ரோஸ் தான் சந்தித்த பாலியல் தொல்லை பிரச்சனையை இந்த ஆண்டு தொடக்கத்திலேயே பொதுவெளிக்கு கொண்டு வந்திருக்கிறார்.
மரீனா மைக்கேல் ஆதரிக்கிறாரா? அசிங்கப்படுத்துகிறாரா?: நகைக்கடை உரிமையாளர் பாபி செம்மனூருக்கு எதிராக ஹனி ரோஸ் கொடுத்த பாலியல் புகார் காரணமாக அவர் கைது செய்யப்பட்ட நிலையில், பலர் எச்சரித்தும் தானும் பல முறை கடை திறப்பு விழாக்களுக்கு சென்றுள்ளேன் என நடிகை மரீனா மைக்கேல் கூறியுள்ளார். ஆனால், பாபி இல்லாத நேரமாகத்தான் விழாக்களுக்கு செல்வேன் என்றும் அங்குள்ள ஊழியர்கள் ரொம்பவே கனிவானவர்கள் எனக் கூறியுள்ளார். மேலும், ஹனி ரோஸ் முன் வைத்துள்ள குற்றச்சாட்டு ரொம்பவே தில்லான ஒரு விஷயம். ஆனால், இதுபோன்ற குற்றச்சாட்டுகள் சில நாட்களில் பின் வாசல் வழியாக நடக்கும் டீலிங் காரணமாக தள்ளுபடி செய்யப்படும் கொடுமை தான் நடக்கின்றன. ஹனி ரோஸ் அப்படி செய்யாமல் இருக்க வேண்டும் என சர்ச்சையை கிளப்பும் விதமாக மரீனா பேசியுள்ளார்.
திரையுலகம் ஹனி ரோஸ் பக்கம்: நடிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் இந்த பாலியல் தொல்லை புகாரில் சம்மந்தப்படாத நிலையில், திரையுலக பிரபலங்கள் நடிகை ஹனி ரோஸுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஹனி ரோஸுக்கு எதிரான கருத்தை சொல்வது போல மரீனா மைக்கேல் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications