எந்த ஹீரோவுக்கு விவாகரத்து ஆனாலும்.. 2வது திருமணத்துக்கு ஐடியா இல்லை.. முற்றுப்புள்ளி வைத்த மீனா

சென்னை: கண்ணழகி என்று தென்னிந்திய ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை மீனா; வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு மீனாவின் கணவர் உடல்நல குறைவால் உயிரிழந்துவிட; சிங்கிள் மதராக வாழ்க்கையை நகர்த்திவருகிறார். ஆனால் அவர் இரண்டாவது திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என்று தொடர்ந்து கிசுகிசுக்கள் பரவின. இந்நிலையில் அதுகுறித்து முதன்முறையாக மனம் திறந்து பேசியிருக்கிறார் மீனா.

கோலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மீனா பின்னர் ஹீரோயினாக மாறினார். ரஜினி, கமல், சரத்குமார், சத்யராஜ், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியான அவர்; தமிழ் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் கலக்கினார். அனைவரும் அவரை கண்ணழகி என்று கொண்டாடினார்கள். பத்து வருடங்களுக்கும் மேலாக யாராலும் அசைக்க முடியாத இடத்தில் இருந்தார் மீனா.

திருமணமாகி செட்டில்: ஒருகட்டத்தில் வித்யாசாகர் என்பவரை கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு நைனிகா என்ற மகள் பிறந்தார். நைனிகாவும் விஜய்யின் தெறி படத்தில் அவருக்கு மகளாக நடித்திருந்தார். அதற்கு பிறகு எந்தப் படத்திலும் நடிப்பதில்லை. இதற்கிடையே நல்லபடியாக போய்க்கொண்டிருந்த திருமண வாழ்க்கையில் பெரிய இடி ஒன்று இறங்கியது.

Actress Meena Breaks Silence on her Second Marriage Rumours at latest interview
Photo Credit:

என்ன இடி?: அதாவது கொரோனா காலகட்டத்தில் சில வருடங்களுக்கு முன்பு உடல்நல குறைவால் உயிரிழந்தார் வித்யாசாகர். அவரது உயிரிழப்பு மீனாவை பெரிய சோகத்தில் தள்ளியது. கணவரின் இழப்பிலிருந்து மீள முடியாமல் திணறிய அவரை; கலா மாஸ்டர், சங்கீதா உள்ளிட்டோர் கொஞ்சம் கொஞ்சமாக மீட்டு கொண்டு வந்தார்கள். முழுவதுமாக மீண்டிருக்கும் மீனா இப்போது நடிப்பில் கவனத்தை செலுத்திவருகிறார்.

கிளம்பிய கிசுகிசு: இது ஒருபக்கம் இருக்க மீனாவின் இரண்டாவது திருமணம் பற்றி தொடர்ந்து கிசுகிசுக்கள் பரவிவந்தன. குறிப்பாக ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை தனுஷ் பிரிந்ததை அடுத்து; அவருக்கும் மீனாவுக்கும் திருமணம் நடக்கப்போவதாக கொளுத்திப்போட்டார்கள். திருமண கிசுகிசு மட்டுமின்றி அவர் அரசியலுக்கு வரவிருக்கிறார் என்றும் தகவல்கள் பரவிக்கொண்டிருந்தன. இதையெல்லாம் பார்த்துக்கொண்டு எந்த ரியாக்ட்டும் செய்யாமல் அமைதியாகவே இருந்தார் அவர்.

மீனாவின் பதில்: இந்நிலையில் முதன்முறையாக மனம் திறந்து பேசியிருக்கிறார் மீனா. அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "எனது திருமணத்தில் சிலர் ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்கள் என எனக்கு புரியவில்லை. எப்போதும் எனது திருமணத்தை மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறார்கள். நான் எனது மகளுடன் ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறேன். மீண்டும் திருமணம் செய்துகொள்ளும் திட்டமெல்லாம் இல்லை. எந்த ஹீரோ விவாகரத்து செய்தாலும் அதை என் திருமணத்துடன் இணைத்து பேசுகிறார்கள். அந்த நடிகருடன் இரண்டாவது திருமணம் என்கிறார்கள். அதில் எந்த உண்மையும் இல்லை. நான் நடிப்புக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கிறேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X