மீனாவுக்கு இருக்கும் தொடர்பு.. அதுதான் காரணம்.. பழசெல்லாம் எதுக்கு கிளப்புறீங்க?.. பிரபலம் அதிரடி

சென்னை: 90களின் கனவு கன்னியாக திகழ்ந்த மீனா பல வருடங்கள் டாப் நடிகையாக ஜொலித்தவர். ரஜினி, கமல், அஜித் என டாப் ஹீரோக்களுடன் தொடர்ந்து நடித்த அவர்; வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து செட்டிலானார். ஆனால் சில வருடங்களுக்கு முன்பு கணவரை இழந்தார். இந்நிலையில் அவரை சுற்றி கடந்த சில காலமாகவே தொடர்ந்து சர்ச்சைகள் கிளம்பிவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மீனாவை ரசிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. குழந்தை நட்சத்திரமாக திரைத்துறைக்குள் வந்து பிறகு ஹீரோயினாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் கலக்கியவர். ரஜினிகாந்த், கமல்ஹாசன் தொடங்கி தெலுங்கில் சிரஞ்சீவி, நாகார்ஜுனா என தென்னிந்திய டாப் ஸ்டார்கள் அத்தனை பேருடனும் ஜோடி போட்டு நடித்தார். அவரது நடிப்பு, அழகுக்கென்று இன்றுவரை பலரும் ரசிகர்களாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் செய்து செட்டிலான மீனா: தென்னிந்திய மொழி திரைத்துறையில் முடிசூடா ராணியாக வலம் வந்த அவர் ஒருகட்டத்தில் சினிமா வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து மெல்ல மெல்ல ஒதுங்க ஆரம்பித்தார். அப்படிப்பட்ட நிலைமையில் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு நைனிகா என்ற மகளும் இருக்கிறார். திருமணம் ஆன் கையோடு குடும்பம், குழந்தையை பார்த்துக்கொள்வதில் முழு கவனத்தையும் செலுத்த ஆரம்பித்தார்.

Actress Meena Caught in Political Rumours Cheguevera Reveals the Truth Behind the Controversy
Photo Credit:

உயிரிழந்த கணவர்: நிம்மதியாக போய்க்கொண்டிருந்த அவரது திருமண வாழ்க்கையில் கொரோனா இடியை இறக்கியது. கொரோனா காலகட்டத்தில் உடல்நலம் சரியில்லாமல் போன வித்யாசாகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு மீனாவை ரொம்பவே சோகத்தில் தள்ளியது. மிகவும் சிரமப்பட்டு அவரை அவரது தோழிகள் பழைய நிலைமைக்கு மீட்டு கொண்டுவந்தார்கள். இப்போது நார்மலாகியிருக்கிறார்.

தொடர்ந்து பேசுபொருள்: சூழல் இப்படி இருக்க தொடர்ந்து அவர் பற்றி கடந்த சில காலமாகவே பலரும் பலவிதமாக பேசுகிறார்கள். அதாவது அரசியலுக்கு மீனா வரவிருக்கிறார் என்றும்; அவர் பாஜகவில் ஐக்கியமாகிவிட்டார் என்று சொல்கிறார்கள். அதற்கேற்றபடி பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் மீனாவும் கலந்துகொண்டது அப்படி பேசியவர்களின் வாய்க்கு அவல் போட்டது மாதிரி ஆகிவிட்டது. ஆனாலும் மீனா இதுவரை சைலெண்ட்டாகவே இருக்கிறார்.

சேகுவேரா பேட்டி: இந்நிலையில் பிரபல பத்திரிகையாளரான சேகுவேரா தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "விஜய்யை மீனா சந்தித்ததாக சிலர் பேசிக்கொள்கிறார்கள். ஆனால் அதெல்லாம் பழைய சந்திப்பு. அதேபோல் அவர் முன்னாள் துணை ஜனாதிபதியை சந்தித்ததை வைத்தும் பலவிதமாக பேசுகிறார்கள். பொதுவாக ஒரு பெண்; அதுவும் ஒரு சினிமா நடிகை கணவரை இழந்து தனியாக வாழ்ந்தாலே இப்படித்தான் பேசுவார்கள். ஏன் பழைய விஷயங்களை எல்லாம் கிளப்ப வேண்டும் என தெரியவில்லை.

செய்தியே வரவில்லை: அவரது கணவர் உயிரோடு இருந்தபோது மீனா பற்றி செய்தியே வரவில்லையே. கலா மாஸ்டர் பாஜகவை சார்ந்து பயணப்படுகிறார். ஆனால் மீனா பாஜகவில் சேரவில்லை. பிரதமுருடைய பொங்கல் விழாவில் மீனா பங்கேற்றதற்கு காரணம் கலாதான். மீனாவுக்கு சில விஷயங்கள் பெர்சனலாக நடக்க வேண்டுமென்பதால்தான் இந்தத் தொடர்புகள் வந்திருக்கின்றன. அது ஒரு நிலம் சார்ந்த பிரச்னை" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X