பிரபல நடிகருக்காக தன்னுடைய பழக்கத்தை மாற்றிக் கொண்ட மீனா.. சிறப்பான மாற்றம்தான்!

சென்னை :நடிகை மீனா தமிழ், தெலுங்கு, மலையாளம் என அடுத்தடுத்த தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.

சிறுமியாக நடிகர் சிவாஜியுடன் நெஞ்சங்கள் என்ற படத்தில் தமிழில் என்ட்ரி கொடுத்த மீனா, தொடர்ந்து ரஜினியுடன் அன்புள்ள ரஜினிகாந்த் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

மீனாவின் திரையுலக பயணம் 40 ஆண்டுகளை கடந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு மீனா 40 என்ற நிகழ்ச்சி சென்னையில் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. இதில் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

நடிகை மீனா

நடிகை மீனா

நடிகை மீனா தமிழில் நடிகர் சிவாஜி கணேசனின் நெஞ்சங்கள் படம் மூலம் என்ட்ரி கொடுத்தவர். தொடர்ந்து குழந்தை நட்சித்திரமாக தென்னிந்திய மொழிகளில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் அன்புள்ள ரஜினிகாந்த் படத்திலும் மீனா மாற்றுத் திறனாளியாக நடித்து சிறப்பான பெயரை பெற்றார். 1980ம் ஆண்டுகளில் துவங்கிய மீனாவின் இந்தப் பயணம் 1990ம் ஆண்டுகளில் நாயகியாக தொடர்ந்தது.

சிறப்பான நாயகி

சிறப்பான நாயகி

நாயகியாக ராஜ்கிரணின் என் ராசாவின் மனசிலே என்ற படத்தில் மீனாவின் என்ட்ரி சிறப்பாக அமைந்தது. இந்தப் படத்தில் ராஜ்கிரணை பார்த்து மிரளும் மீனாவின் கண்களை, அவரது நடிப்பை ஒருமுறை பார்த்த ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியாது. தொடர்ந்து ரஜினியுடன் எஜமான் படத்திலும் வைத்தீஸ்வரி கேரக்டரில் மாமா, மாமா என்று ரஜினியிடம் உருகும் மீனாவின் கேரக்டரும் எவர்கிரீன் ரகத்தை சேர்ந்தது.

முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி

முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி

இந்நிலையில் தொடர்ந்து ரஜினி, கமல், சத்யராஜ், சரத்குமார், விஜய்காந்த் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு, ரசிகர்களை கட்டிப் போட்டார் மீனா. ரஜினியுடன் மீனா நடித்த முத்து படம், ஜப்பானிலும் வெளியாகி, ஜப்பான் ரசிகர்களின் பேவரைட் லிஸ்ட்டில் இடம்பெற்றது. கடந்த 2009ம் ஆண்டில் திருமணம் செய்துக் கொண்ட போதிலும், தன்னுடைய நடிப்பை தொடர்ந்தார் மீனா.

40 ஆண்டுகள் நிறைவு

40 ஆண்டுகள் நிறைவு

இந்நிலையில் மீனாவின் திரையுலகப் பயணம் 40 ஆண்டுகளை நிறைவு செய்ததை தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அவருக்கு மீனா 40 என்ற நிகழ்ச்சி மூலம் பாராட்டுவிழா நடத்தப்பட்டது. அவரது திரையுலக தோழிகள் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். மிகுந்த சுவாரஸ்யங்கள் நிறைந்ததாக இந்த நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது.

மீனா குறித்த சுவாரஸ்யம்

மீனா குறித்த சுவாரஸ்யம்

இதனிடையே மீனா குறித்த சுவாரஸ்யமான விஷயத்தை நடிகர் சித்ரா லட்சுமணன் தற்போது பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார். தமிழைப் போலவே தெலுங்கிலும் பிசியாக இருந்த நடிகை மீனா, எப்போதும் படப்பிடிப்பிற்கு சரியான நேரத்தில் வந்துவிடுவாராம். இந்தப் பழக்கத்திற்கு பிரபல நடிகர் நாகேஸ்வர ராவ்தான் காரணமாம். அவர் மீனாவிடம் ஒருமுறை, நீ யாருக்காகவும் காத்திருக்கலாம், ஆனால் யாரும் உனக்காக காத்திருக்கக்கூடாது இந்தப் பழக்கத்தை மட்டும் எப்போதும் கற்றுக் கொள் என்று கூறினாராம். அதை மனதில் வைத்துக் கொண்ட மீனா தற்போதுவரை கடைபிடித்து வருகிறாராம்.

சிறப்பான செயல்பாடுகள்

சிறப்பான செயல்பாடுகள்

தமிழ், தெலுங்கு, மலையாளம் என அடுத்தடுத்த படங்களில் நடித்துவந்தாலும், எந்த தயாரிப்பாளரும் இதுவரை மீனா குறித்த எந்தவிதமான புகாரையும் சொன்னது கிடையாது. இதேபோல மீனாவால் எந்தவொரு நஷ்டமும் எந்த தயாரிப்பாளருக்கும் வந்தது கிடையாது. அந்த அளவிற்கு தன்னுடைய செயல்பாடுகளில் மிகவும் கிளியராக இருந்து வருகிறார் மீனா. தன்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பையும் தாண்டி தற்போது பீனிக்ஸ் பறவையாக மீண்டு வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X