என்னடா மச்சான் வசனமே புரியல.. பேசாம படத்தை பாருடா.. கை தூக்கி ஆட்டம் போட்ட மூனு ஹீரோயின்கள்!

சென்னை: தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மீனா, 90 கால கட்டத்தில் ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்து ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறினார். திருமணத்திற்கு பின் சினிமாவை விட்டு விலகி இருந்த மீனா, தற்போது மீண்டும் சினிமாவில் தனக்கு தகுந்த படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் இணையத்தில் அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

பெயருக்கு ஏற்றார் போல மீன் போன்ற கண்கணை கொண்ட நடிகை மீனா, ராஜ்கிரண் நடிப்பில் கஸ்தூரி ராஜா இயக்கத்தில் வெளிவந்த "என் ராசாவின் மனசிலே" படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் போது மீனாவுக்கு வயது 15 தான். பத்திரிகை ஒன்றில் மீனாவின் போட்டோவை பார்த்த கஸ்தூரி ராஜா, நேராக வீட்டுக்கு சென்று, இந்த பொண்ணு இந்த படத்திற்கு ஹீரோயினாக பொருத்தமாக இருப்பார் என்று பேசி அந்த படத்தில் நடிக்க வைத்தார். முதல் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு தனக்கு கிடைத்த நிறைய வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்ட மீனா. ரஜினிகாந்த், கமல் ஹாசன், சத்யராஜ், விஜயகாந்த், பிரபு, கார்த்திக், அஜித், என பல முன்னணி ஹீரோக்களுடன் தொடர்ந்து ஜோடியாக நடித்துள்ளார்.

Meena sangitha krish maheswari

தனக்கு தகுந்த கதைகள்: சினிமாவில் பிஸியாக நடித்துக்கொண்டு இருந்த மீனா, வித்யாசாகர் என்பவரை அவர் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். அவரும் தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நடித்தார். இந்த நேரத்தில் தான், மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலன் அளிக்காமல், உயிரிழந்தார். கணவர் உயிரிழந்த பிறகு ஒரு சில திரைப்படத்தில் மீனா, தனக்கு தகுந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

ஆட்டம் போட்ட மீனா: கணவர் உயிரிழப்பால், மிகவும் பாதிக்கப்பட்டு இருந்த மீனா, ஒருவழியாக அதிலிருந்து மீண்டு இப்போது நார்மலாக இருக்கிறார். அவ்வப்போது தனது காலத்து நடிகைகளை நேரில் சந்தித்து ஃபன் செய்தும் வருகிறார். அந்த வகையில் நடிகை மீனா, தனது நெருங்கிய தோழியான சங்கீதா மற்றும் மகேஷ்வரியுடன் செமயாக ஆட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோவை மீனா தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் அட 90ஸ் ஃபேவரைட் ஹீரோயின்ஸுக்கு இன்னும் அழகு குறையவே இல்லையே என்றும், மூனு ஹீரோயினும் சூப்பர் என கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X