Actress Meena: Middle of the Night.. சென்னையில இதுபோல நான் என்ஜாய் பண்ணதில்லை.. மீனா பகிர்ந்த தகவல்!

சென்னை: நடிகை மீனா தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிப் படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளவர்.

தமிழில் கமல், ரஜினி, அஜித், விஜய் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து அதிகமான ஹிட் படங்களை கொடுத்துள்ளார் மீனா.

Actress Meena enjoys middle of the night in middle of the road in chennai

திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயான போதிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது கணவர் வித்யாசாகர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

நடிகை மீனா: நடிகை மீனா தன்னுடைய சிறுவயதில் இருந்து நடித்து வருகிறார். ரஜினி, கமல் முதல் அஜித், விஜய் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள மீனா, தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிப்படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயான நிலையிலும் நடிப்பை விட்டுவிடாமல் தொடர்ந்து வருகிறார் மீனா. சமீபத்தில் இவரது கணவர் வித்யாசாகர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிகழ்வு திரையுலகினரை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

கணவரின் மரணம்: இதனால் இடிந்துபோன மீனா, தற்போது தன்னுடைய கணவரின் மரணத்தின் பாதிப்பிலிருந்து மீண்டு வருகிறார். தற்போது மீண்டும் படங்களில் நடிக்க துவங்கியுள்ள மீனா, அடுத்தடுத்த பயண கொண்டாட்டங்களில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். தொடர்ந்து மீனாவின் சமூக வலைதள பதிவுகள் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகின்றன. மீனாவின் இத்தகைய இக்கட்டான சூழலில் அவரது திரையுலக நண்பர்கள் அவருக்கு அதிகமாக கைக்கொடுத்தனர். சங்கவி, கலா மாஸ்டர் உள்ளிட்ட பலரும் தொடர்ந்து மீனாவை நேரில் சந்தித்து அவர், இந்த மனநிலையிலிருந்து மீண்டு வர உதவி செய்ததையும் சமூக வலைதளங்கள் மூலமாக பார்க்க முடிந்தது.

முத்து படம் ரீ ரிலீஸ்: சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் மீனா. சமிபத்தில் ரஜினியுடன் மீனா நடித்திருந்த முத்து படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில், அந்தப் படத்தின் FDFSவை ரசிகர்களுடன் இணைந்து மீனா ரோஹினி திரையரங்கில் பார்த்தார். அந்த இனிமையான அனுபவத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவுடன் பகிர்ந்திருந்தார். இதுபோன்ற அனுபவத்தை தான் இதற்கு முன்பு அனுபவித்ததில்லை என்று தன்னுடைய சிலிர்ப்பையும் அவர் வெளிப்படுத்தியிருந்தார். 28 ஆண்டுகளை கடந்த போதிலும் படத்தின் மேஜிக் தொடர்வதாகவும் அவர் கூறியிருந்தார்.

Middle of the nightல் மீனா: இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் சென்னையில் Middle of the night, Middle of the Roadல் அவர் இருந்ததை பார்க்க முடிந்தது. இதுபோன்ற ஒரு அனுபவத்தை சென்னையில் இதற்கு முன்பு தான் எக்ஸ்பீரியன்ஸ் செய்ததே இல்லை என்றும் அவர் தன்னுடைய நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார். இரவு நேரத்தில் இதுபோன்ற ஒரு சாலையில் மையத்தில் ஓ மை காட் என்றும் அவர் தனது சிலிர்ப்பை வெளிப்படுத்தினார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்களும் உற்சாகமாக கமெண்ட்களை அளித்து வருகின்றனர். இந்த வீடியோவில் மீனா மிகவும் க்யூட்டாக காணப்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

ரஜினி ஜோடி: நடிகர் சிவாஜி கணேசனின் நெஞ்சங்கள் படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மீனா. தொடர்ந்து ரஜினியுடன் அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். மாற்றுத் திறனாளி குழந்தையாக அவர் ரசிகர்களை கொள்ளைக் கொண்டார். சில வருடங்களிலேயே ரஜினியுடன் எஜமான் படத்திலும் நடித்து அதன்மூலம் கோலிவுட் மட்டுமில்லாமல் தென்னிந்திய அளவில் முன்னணி ஹீரோயினாக மாறினார் மீனா. வாழ்க்கையில் அவரது கணவரின் மறைவு அவருக்கு பேரிடியாக அமைந்த போதிலும் தற்போது அதிலிருந்து அவர் மீண்டுள்ளது அவரது நட்பு வட்டத்திற்கு மட்டுமில்லாமல் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X