Meena - அய்யோ நீச்சல் உடை அணிந்துகொண்டு பட்ட பாடு இருக்கே.. மனம் திறந்த நடிகை மீனா
சென்னை: நடிகை மீனா 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். பல ஹீரோக்களுடன் ஜோடி போட்ட அவருக்கு கண்ணழகி மீனா என்ற பெயரும் உண்டு. வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்ட அவருக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். இப்போது ஒரு சில படங்களில் நடித்துவரும் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் மீனா. அதனையடுத்து தெலுங்கில் ஹீரோயினாக அறிமுகமான அவர் தமிழில் என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார். அந்தப் படம் மெகா ஹிட் ஆனது. இதனையடுத்து தமிழில் அவருக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் கிடைத்தன. அந்தவகையில் ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்டோருடனும் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதிலும் ரஜினிகாந்த்துடன் அவருக்கு கெமிஸ்ட்ரி படு பயங்கரமாக ஒர்க் அவுட் ஆகியிருந்தது.

ஹிட்தான்: ரஜினியும், மீனாவும் சேர்ந்து நடித்த எஜமான், முத்து, வீரா உள்ளிட்ட படங்கள் மெகா ஹிட்டாகின. மீனா குறித்து ஒரு மேடையில் பேசியிருந்த ரஜினிகாந்த், அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் நடித்த மீனாவா இது என்று அவர் வளர்ந்த பிறகு பார்த்து ஆச்சரியப்பட்டதாக தெரிவித்திருந்தார். அதேபோல் கமல் ஹாசனுடனும் அவர் நடித்த அவ்வை சண்முகி படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.
சிறந்த நடிகை: மீனா எந்த கேரக்டருக்கும் செட் ஆகக்கூடியவர். அவரால் முத்து படத்தில் தில்லானா தில்லானா பாடலுக்கு செம டான்ஸ் ஆடவும் முடியும்; பொற்காலம் படத்தில் பக்குவமான நடிகையாக மிளிரவும் முடியும். 90கள் இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் மீனா. அவருக்கு போட்டியாக அந்த காலக்கட்டத்தில் ரம்பா, சௌந்தர்யா, நக்மா என ஏகப்பட்ட நடிகைகள் தமிழ் சினிமாவில் இருந்தாலும் மீனா தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்திருந்தார்.
ஹோம்லி டூ கிளாமர்: தான் பீக்கில் இருந்த சமயத்தில் ஓரளவு மட்டுமே கிளாமர் காட்டியவர் மீனா. வாலி படத்தில்கூட ஓவர் கிளாமர் இருந்ததால் விலகிக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படிப்பட்ட மீனா பிரபுதேவாவுடன் ஒரு படத்தில் நீச்சல் உடையில் நடித்திருப்பார். அது அப்போது பலருக்கும் ஷாக்கை கொடுத்தது. இந்நிலையில் அந்த நீச்சல் உடை அணிந்து நடித்தது குறித்து சமீபத்திய பேட்டியில் பேசியிருக்கிறார் மீனா.
மீனா பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "கிளாமர் காட்சிகளை நான் தவிர்த்துக்கொண்டிருந்த காலத்தில் என்னை சுற்றி இருந்தவர்கள் என்னிடம் ஏன் நீங்கள் கிளாமர் ரோலை முயற்சிக்கக்கூடாது என கேட்டார்கள். அதுமட்டுமில்லாமல் அப்படி ஒரு முயற்சி செய்தால் என்னவென்று எனக்கே தோன்றியது. அந்தவகையில் பிரபுதேவா படத்தில் நீச்சல் உடையில் நடித்திருப்பேன்.
அய்யோ பட்ட பாடு இருக்கே: அந்த நீச்சல் உடையை அணிந்ததும் மேக்கப் ரூமிலிருந்து என்னால் வெளியே வரவே முடியவில்லை. அவ்வளவு நெருடலாக இருந்தது. எப்படி செல்வது என்ற கூச்சம் இருந்தது. அப்போதுதான், இந்த மாதிரியான கிளாமர் மற்றும் கவர்ச்சியான காட்சிகளில் நடிக்கும் நடிகைகளின் காலில் விழுந்து கும்பிட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு தோன்றியது" என்றார்.
மீனாவின் திருமண வாழ்க்கை: மீனா வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். வித்யாசாகர் சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு மீனாவுக்கு பெரும் இடியாக இறங்கி முடக்கி போட்டது. பிறகு அவருடன் பணியாற்றிய நடிகைகள் அவரை தேற்றினர். இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஒரு ரியாலிட்டி ஷோவில் நடுவராக இருக்கிறார் மீனா. மேலும் சில படங்களில் நடிக்க கமிட்டாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











