Actress Meena: மீனா குழந்தையாக நடித்து ஜோடியாகவும் நடித்த நடிகர்கள்.. அட லிஸ்ட் பெருசா போகுதே!
சென்னை: நடிகை மீனா சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட நடிகர்களுடன் மகளாக தமிழில் நடித்துள்ளார். தொடர்ந்து கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, மம்முட்டி உள்ளிட்ட நடிகர்களுடன் மகளாகவும் அவர்களுடனே பிற்காலத்தில் நாயகியாகவும் இணைந்து நடித்துள்ளார்.
ரஜினியுடன் அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள மீனா, முன்னதாக எங்கேயோ கேட்ட குரல் படத்திலும் மகளாக நடித்திருந்தார். இதையடுத்து அவருக்கு ஜோடியாகவே நடித்தார். இவை மிகப்பெரிய விமர்சனங்களை எழுப்பியிருந்தன. ஆனால் தமிழிலேயே இத்தனை நடிகர்களுடன் மகளாகவும் ஜோடியாகவும் மீனா நடித்துள்ளது ரசிகர்களை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கி வருகின்றன.

நடிகை மீனா: நடிகை மீனா நெஞ்சங்கள் என்ற படத்தில் சிவாஜி கணேசனின் மகளாக நடித்து குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய திரைப் பயணத்தை கோலிவுட்டில் துவங்கியவர். தொடர்ந்து ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், பிரபு உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து குழந்தை நட்சத்திரமாகவே நடித்துள்ளார். தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழி படங்களிலும் குழந்தை நட்சத்திரமாகவே நடித்துள்ளார். தொடர்ந்து ரஜினிகாந்துடன் எஜமான் படத்தில் நாயகியாக என்ட்ரி கொடுத்திருந்தார். இந்த படத்தில் அவர்களின் கெமிஸ்ட்ரி பேசப்பட்டாலும் முன்னதாக மகளாக நடித்த நடிகையுடன் எப்படி அவர் ஜோடி போட்டு நடிக்கிறார் என்ற விமர்சனத்தை இந்த படம் ஏற்படுத்தியது.
விமர்சனங்களை ஏற்படுத்திய ஜோடி: இதற்கு பதிலளித்து இருந்த ரஜினிகாந்த், மீனாவுடன் இணைந்து ஜோடி போட்டு நடிக்க தனக்கு துவக்கத்தில் தயக்கமாக இருந்ததாக தெரிவித்திருந்தார். ஆனாலும் இந்த ஜோடி அடுத்தடுத்து முத்து, அண்ணாத்த ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளது. மீனா ரஜினியுடன் இணைந்து நடித்த அன்புள்ள ரஜினிகாந்த் படம் மட்டுமே அவரை சிறப்பாக அறிமுகப்படுத்தியது. முன்னதாக எங்கேயோ கேட்ட குரல் படத்தில் ரஜினிக்கு மகளாக நடித்திருந்தார் மீனா. அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் ரஜினி அங்கிள் என்று அவர் கூறும் போது அந்த படத்தில் அவரை தன்னுடைய மகளாகவே பாவிப்பார் ரஜினிகாந்த்.
முன்னணி நடிகர்களுக்கு மகள் & ஜோடி: இந்த நிலையில் தான் இந்த ஜோடி எஜமான் படத்தில் மிகப்பெரிய விமர்சனங்களை ஏற்படுத்தியது. ஆனால் ரஜினிகாந்துடன் மட்டும் இல்லாமல் கமல்ஹாசன், சத்யராஜ், பிரபு, மம்முட்டி உள்ளிட்ட நடிகர்களுடனும் தான் மகளாக, குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளதாக நடிகை மீனா தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். அந்த வகையில் கமலுடன் யாத்கர் என்ற இந்தி படத்தில் மகளாக நடித்துள்ள மீனா, தொடர்ந்து அவ்வை சண்முகி படத்தில் கமலுக்கு ஜோடி போட்டு நடித்திருந்தார். இதே போல சத்யராஜ் உடன் ஒரு படத்திலும் பிரபுவுடன் திருப்பம் உள்ளிட்ட இரு படங்களிலும் மீனா குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
அன்புள்ள ரஜினிகாந்த் படம்: இதேபோல தெலுங்கில் பாலகிருஷ்ணாவுடன் டிஸ்கோ டான்சர் படத்திலும் மம்முட்டியுடன் மலையாள படத்திலும் மகளாக நடித்துள்ளார் மீனா. தொடர்ந்து அவர்களுடன் நாயகியாக ஜோடி போட்டும் நடித்துள்ளார். ஆனால் ரஜினியுடன் அவர் நடித்த அன்புள்ள ரஜினிகாந்த் படம் தான் மிகவும் ஹைலைட்டாக அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்துள்ளது. அதனால்தான் அவர் ரஜினியுடன் ஜோடியாக நடித்தது விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
மூத்த நடிகர்களுடன் ஜோடி: ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ் சரத்குமார் என பெரிய நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார் மீனா. இதனால்தான் இவருக்கு அடுத்த தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அஜித்துக்கு ஜோடியாக ஆனந்த பூங்காற்றே படத்தில் ஜோடியாக நடித்துள்ளார் மீனா. ஆனால் இளையவராக இருந்தாலும் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு மீனாவிற்கு கிடைக்கவில்லை. மூத்த நடிகர்களுடன் இணைந்து நடித்ததால் மீனா -விஜய் காம்பினேஷனை இயக்குனர்கள் மட்டும் இல்லாமல் தயாரிப்பாளர்களும் யோசிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆயினும் இந்த ஜோடி பாடல் ஒன்றில் இணைந்தது ஆறுதல்.


Click it and Unblock the Notifications











