தங்க நிற உடையில் தேவதை போல மின்னிய மீனா.. 49 வயசுனு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க!

சென்னை: தமிழ் சினிமாவின் எவர்கிரீன் நடிகைகளில் ஒருவரான நடிகை மீனா, இன்றும் ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்தவர். குழந்தை நட்சத்திரமாக தொடங்கி முன்னணி ஹீரோயினாக உயர்ந்த அவர், காலம் கடந்தும் தனது அழகாலும் எளிமையாலும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

நடிகை மீனா தனது இன்ஸ்டாகிராமில் புதிய போட்டோவை பகிர்ந்துள்ளார். அதில், தங்க நிற டிசைனர் உடையில் மிக அழகாக காட்சியளிக்கிறார் மீனா. எம்பிராய்டரி வேலைப்பாடுகளுடன் கூடிய அனார்கலி ஸ்டைல் உடையும், அதற்கு பொருத்தமாக அணிந்த துப்பட்டாவும் அவரின் அழகை இன்னும் உயர்த்தி காட்டுகிறது. ஒரு புகைப்படத்தில் சிரித்த முகத்துடன் அமர்ந்து போஸ் கொடுத்திருக்கும் மீனா, மற்றொரு புகைப்படத்தில் கையை உயர்த்தி ரசிகர்களை வரவேற்பது போல காட்சியளிக்கிறார். இயல்பான மேக்கப், கர்லி ஹேர் ஸ்டைல், மென்மையான நகைகள் என எளிமையிலும் எலிகன்ஸிலும் அசத்தியுள்ளார்.

\

Meena photo
Photo Credit:

வயசே ஆகாதா: இந்த போட்டோவை பார்த்த பேன்ஸ் "வயசே ஆகாத அழகு", "குயின் மீனா", "இன்னும் அதே அழகு" என ரசிகர்கள் கமெண்ட்களில் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக இந்த தங்க நிற outfit, அவருக்கு ராயல் லுக் கொடுத்திருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சினிமாவிலும் தொலைக்காட்சியிலும் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும் மீனா, தனது ஒவ்வொரு public appearance மூலமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இந்த லேட்டஸ்ட் புகைப்படங்களும் அதற்கு விதிவிலக்கல்ல.

வருத்தப்பட்ட மீனா: நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் 2022ஆம் ஆண்டு உயிரிழந்தார். அவர் மறைந்த பின் இரண்டாவது திருமணம் குறித்து பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இரண்டாவது திருமணம் வேண்டுமா? திருமணத்தைப் பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்பதை நான் தான் வெளியில் சொல்ல வேண்டும். ஆனால், என்னைத் தவிர அனைவரும் எனது திருமணத்தைபற்றி பேசுகிறார்கள், எனக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்படுகிறார்கள். உண்மை இல்லாததை நேரில் பார்த்தது போல எழுதுகிறார்கள். இதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. நான் கர்மாவை நம்புகிறேன், கர்மா அவர்களை சும்மாவிடாது என மீனா அந்த பேட்டியில் வருத்தப்பட்டு பேசி இருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X