அழகு பதுமை மீனாவின் புது வீடியோ.. இணையத்தில் உருகும் ரசிகர்கள்.. என்னமா இருக்காங்க!

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக 2000களில் வலம் வந்தவர்களில் நடிகை மீனாவும் ஒருவர். சிறுவயதில் இருந்து சினிமாவில் நடித்தாலும் தான் படத்தின் கதாநாயகி ஆன பின்னர் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக மாறினார். குறிப்பாக தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களான ரஜினிகாந்த், கமல் ஹாசன் மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து வந்தார். இவரது புது வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

மீனா சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து நடித்த முத்து படம் ஜப்பானில் தாறுமாறான வெற்றியைப் பெற்றதால் ஜப்பானிலும் மீனாவுக்கு ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். இவரது நடிப்பில் இவருக்கு பாராட்டைப் பெற்றுக் கொடுத்த படம் என்றால் அதில், அவ்வை சண்முகி, வெற்றிக்கொடிகட்டு, மாயி, ஆனந்த பூங்காற்றே உள்ளிட்ட பல படங்களைக் குறிப்பிடலாம்.

Meena Dance

சூப்பர் ரஜினிகாந்துடன் அவரது அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் குழந்தைக் கதாபாத்திரமாக தனது சிறு வயதில் நடித்தார். அதன் பின்னர் என் ராசாவின் மனிசிலே படத்தில் கதாநாயகியக அறிமுகம் ஆகி, தொடர்ந்து நடித்து வந்தார். ரஜினிக்கு ஜோடியாக முதன் முதலில் எஜமான் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திலும் பாராட்டைப் பெற்றார். விஜயகாந்த், சரத்குமார், சத்யராஜ், கார்த்திக், முரளி, பார்த்திபன், அஜித் என பல முன்னணி கதாநாயர்களுடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் இவரது மகள் தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நடித்திருந்தார்.

Meena Dance

படையப்பா: அண்மையில் கூட இவரது அம்மாவின் நிர்பந்ததால், படையப்பா மற்றும் தேவர் மகன் படங்களில் நடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டதாக கூறியுள்ளார். குறிப்பாக, " கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் நாட்டாமை, முத்து படங்களில் நடித்த மீனா படையப்பா படத்தில் நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடிக்க தனக்குத்தான் முதலில் வாய்ப்பு வந்தது. ஆனால், ரஜினி சாருடன்ஜோடியாக நடித்து வந்த நிலையில், திடீரென அவருக்கு அப்போஸிட்டாக நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்தால் ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள் என எங்க அம்மா தான் சொல்லி வேண்டாம்" எனக் கூறி படத்தில் நடிக்கும் வாய்ப்பினை தவறவிட்டதாக கூறியுள்ளார்.

Meena Dance

கணவர் மறைவு: இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவரது கணவர் மாரடைப்பால் இறந்தபோது ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமுமே அவருக்கு துணை நின்று அவரை துயரத்தில் இருந்து மீட்டு வந்தது. குறிப்பாக நனனக் கலைஞர் கலா மாஸ்டர் மீனாவின் கம்பேக்கில் முக்கிய காரணமாக இருந்தார். தற்போது இணையத்தில் கொஞ்சம் சுறுசுறுப்பாக இருந்து வருகின்றார்.

Meena Dance

புது வீடியோ: குறிப்பாக போட்டோ சூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்வதை வாடிக்கையாக கொண்டு வருகின்றார். இந்நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் பெரும்பாலான இணையவாசிகள் மத்தியில் பிரபலமாக உள்ள பாடலுக்கு நடனம் ஆடி மீனா பதிவிட்டுள்ளார். சூப்பராக நடனமாடி அவர் பதிவிட்டுள்ள வீடியோவுக்கு ரசிகர்கள் லைக்குகளைத் தட்டி விட்டு வருகின்றனர். ஒரு சில ரசிகர்கள் அழகு பதுமை என்றும், ஒருசிலர் தமிழ் சினிமா உங்களை இன்னும் கொண்டாடி இருக்க வேண்டும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Read more about: meena dance மீனா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X