நான் நல்லா பிரியாணி பண்ணுவேன்.. ஆனா நைனிகாவுக்குத்தான் பிடிக்காது.. காரணம் சொன்ன மீனா!

சென்னை: நடிகை மீனா சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்களுடன் சிறுமியாகவே நடித்துள்ளார். தொடர்ந்து ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருடன் ஜோடி போட்டு நாயகியாகவும் மாஸ் காட்டியுள்ளார். தற்போது 40 வயதை கடந்த நிலையிலும் ரஜினிகாந்த் உள்ளிட்டவர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது கணவர் வித்யாசாகர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் அதிகமான படங்களை கமிட் செய்யாமல் உள்ளார் மீனா. அவரது மகள் நைனிகாவும் விஜய், அரவிந்த்சாமி உள்ளிட்டவர்களுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளார். தற்போது அவரும் படிப்பில் கவனத்தை செலுத்தி வருகிறார்.

Meena Nainika tamil cinema

நடிகை மீனா: நடிகை மீனா சிறு வயதிலிருந்து நடித்து வருகிறார். சிறுமியாக சிவாஜி கணேசன். கமல்ஹாசன். ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த மீனா. பின்னர் நாயகியாக கமல்ஹாசன். ரஜினிகாந்த்திற்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ள மீனா, ரஜினியுடன் மட்டுமே பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். கமல்ஹாசனுடன் அவ்வை சண்முகி என்ற படத்தில் மட்டுமே நடித்துள்ளார். இந்நிலையில் தொடர்ந்து திருமணம் ஆகி குழந்தை பிறந்து அவருடைய கணவர் வித்யாசாகர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையிலும் தன்னுடைய நடிப்பை விட்டுக் கொடுக்காமல் தொடர்ந்து நடித்து வருகிறார் மீனா.

மீனா 40 நிகழ்ச்சி: கடந்த ஆண்டில் மீனா 40 என்ற சிறப்பான நிகழ்ச்சியை ரஜினிகாந்த் உள்ளித்த படக் குழுவினர் இணைந்து கொண்டாடினர். திரையுலகில் மீனா என்ட்ரி ஆகி 40 ஆண்டுகளை நிறைவு செய்ததன் அடையாளமாக இந்த நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. ஆனால் இதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் இளமை பொலிவுடன் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார் மீனா. அவருடைய மகள் நைனிகாவும் விஜய், அரவிந்த்சாமி என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள நிலையில் தற்போது அவர் தனது படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். மீனா தனது கணவர் மறைவை அடுத்து தொடர்ந்து அதிகமான படங்களில் கமிட் ஆகாமல் தன்னை மீட்டுருவாக்கம் செய்து வருகிறார்.

மீனா உற்சாகம்: இந்நிலையில் மீனாவின் அடுத்தடுத்த பேட்டிகளை பார்க்க முடிகிறது. அவரது நெருங்கிய தோழியான கலா மாஸ்டர் மீனாவிடம் எடுத்த பேட்டி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் மிக அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அந்த பேட்டியில் கலா மாஸ்டர் மீனாவிற்கு சமைக்க தெரியுமா என்ற கேள்வியை எழுப்பி இருந்தார். அவரது கேள்வி நியாயமானது, ஏனென்றால் சிறுமியாக இருந்த போதிலிருந்தே தொடர்ந்து நடித்து வருகிறார் மீனா. இதனால் அவருக்கு சமையல் அதிகமாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை இருந்தபோதிலும் தான் தினந்தோறும் சமைப்பதில்லை என்ற போதிலும் தனக்கு பிரியாணி சமைக்க தெரியும், பாசுந்தி செய்ய தெரியும் என்று மீனா உற்சாகமாக பதில் அளித்தார்.

நைனிகாவிற்கு பிடிக்காத மீனா சமையல்: தனக்கு மாவு எப்படி ரெடி செய்வது என்பது தெரியாது, இருந்தபோதிலும் அந்த மாவை கொண்டு இட்லி, தோசை போன்றவற்றை தான் சிறப்பாக செய்வேன் என்றும் மீனா பெருமையாக கூறினார். நைனிகாவிற்கு அவர் ஏதாவது சமைத்துக் கொடுத்து அசத்தியிருக்கிறாரா என்ற கலா மாஸ்டர் கேள்விக்கு பதிலளித்த மீனா, நைனிகாவிற்கு வீட்டில் செய்த பொருட்களை விட வெளியில் சாப்பிடும் ஜங்க் பொருட்கள் தான் அதிகமாக பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் மீனாவின் பேட்டி பல சுவாரஸ்யங்களை உள்ளடக்கியதாக காணப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X