Actress Meena: லிப்லாக் சீன்.. கதறி அழுத மீனா.. கமல் சொன்ன விஷயம்!

சென்னை: நடிகை மீனா தன்னுடைய சிறிய வயதிலிருந்தே நடித்து வருகிறார். ரஜினி, கமல், சிவாஜி உள்ளிட்டவர்களுடன் இணைந்து நடித்துள்ளார் மீனா. நெஞ்சங்கள் என்ற படத்தில் சிறுமியாக நடிகர் சிவாஜிகணேசனுடன் நடித்துள்ள இவர் தொடர்ந்து ரஜினியுடனும் அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் சிறுமியாக நடித்துள்ளார். தொடர்ந்து நாயகியாகவும் ரஜினியுடன் எஜமான், முத்து போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த ஜோடி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

நடிகை மீனா திருமணம், குழந்தை மற்றும் கணவரின் மரணம் என எந்த விஷயமும் தன்னுடைய கேரியரை பாதிக்காத வகையில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். கணவரின் மரணத்தால் உடைந்துப் போன மீனாவிற்கு அவரது சினிமா தோழிகள் ஆறுதல் கொடுத்த நிலையில் தற்போது மீண்டும் படங்களில் கவனம் செலுத்தத் துவங்கியுள்ளார். தொடர்ந்து தன்னுடைய வெளிநாட்டு சுற்றுப்பயணங்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

Actress Meena shared about Avvai Shanmugi movie with Kamal haasan in her recent interview

நடிகை மீனா: நடிகை மீனாவை குழந்தை நட்சத்திரமாக பார்த்து ரசித்த ரசிகர்கள், தொடர்ந்து நாயகியாகவும் ரசித்தனர். தற்போதும் அவர் நாயகியாக மோகன்லால், ரஜினிகாந்த் உள்ளிட்டவர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். மலையாளம், தெலுங்கு, தமிழ் படங்களில் அவரை தொடர்ந்து பார்க்க முடிகிறது. அடுத்தடுத்த சிறப்பான கேரக்டர்களில் அவரை பார்க்கும் ரசிகர்கள், அவர் தனது அழகை தொடர்ந்து மெயின்டெயின் செய்துவருவது குறித்து ஆச்சர்யம் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் அவரது 40 ஆண்டுகால திரை வாழ்க்கைக்கான பாராட்டு விழா நடந்த நிலையில், அவரது அழகு குறித்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தும் பாராட்டி பேசினார்.

அவ்வை சண்முகி படம்: கமலுடன் அவ்வை சண்முகி படத்தில் இணைந்து நடித்துள்ளார் மீனா. இதனிடையே, அந்தப் படத்தின் அனுபவங்கள் குறித்து அவர் பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார். கமல் படங்களில் முத்தக்காட்சிகள் இருக்கும் என்று தெரிந்திருந்தாலும், அவ்வை சண்முகி படத்தில் நடிக்க தான் ஒப்புக் கொண்டதாகவும் ஆனால் படத்தின் சூட்டிங்கின் இரண்டாவது நாளிலேயே படத்தின் உதவி இயக்குநர் முத்தக்காட்சி குறித்து தன்னிடம் பேசியதாகவும் மீனா குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து கேரவனில் தன்னுடைய தாயிடம் தான் கதறி அழுததாகவும் மீனா தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

லிப்லாக் சீன் குறித்து பயந்த மீனா: இதை எப்படி செய்வது என்று தான் பயந்ததாகவும் இது முடியாது என்று இயக்குநரிடம் சொல்லுங்கள் என்று தன்னுடைய தாயிடம் தான் கூறியதாகவும் தனது பேட்டியில் கூறியுள்ளார். தொடர்ந்து சூட்டிங் ஸ்பாட்டிற்கு தான் சென்ற நிலையில், அங்குவந்த நடிகர் கமல்ஹாசன், படத்தில் லிப்லாக் காட்சி இல்லை என்று கூறியதாகவும் இதை தொடர்ந்தே தனக்கு நிம்மதி பெருமூச்சு வந்ததாகவும் கூறியுள்ளார். கமல்ஹாசன் -மீனா கூட்டணியில் வந்த அவ்வை சண்முகி படத்தில் பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் கமல்ஹாசன். கோபித்துக் கொண்டு அப்பா வீட்டிற்கு சென்ற தன்னுடைய மனைவியை சமாதானப்படுத்தும் நோக்கத்தில் பெண் வேடம் போடுவதாக இந்தப் படத்தில் கமல் கேரக்டர் அமைந்திருந்தது.

முக்கியமான கேரக்டரில் ஜெமினி கணேசன்: இந்தப் படத்தில் நடிகர் ஜெமினி கணேசன் மீனாவின் தந்தையாக, பெண் வேடமிடும் கமல்ஹாசனை காதலிப்பவராக நடித்திருந்தார். அவரது கேரக்டர் இந்தப் படத்திற்கு மிகச்சிறப்பாக அமைந்தது. காமெடிப் படங்களை சிறப்பான என்டர்டெயின்மெண்ட்டுடன் கொடுக்கும் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகி மாஸ் ஹிட் கொடுத்தது. இந்தப் படத்தில் மீனாவின் கேரக்டரும் முக்கியமானதாக அமைந்தது. தன்னுடைய கணவர்தான் அவ்வை சண்முகி என்பது தெரியாமல், தன்னுடைய தந்தை அவருக்கு முக்கியத்துவம் கொடுப்பதை ஏற்க முடியாமல் அவர் தவிப்பது படத்தில் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X