2023ம் ஆண்டை செல்ஃபியுடன் துவங்கிய நடிகை மீனா.. கலர்புல் புகைப்படங்கள் பகிர்வு!

சென்னை : நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய கேரியரை துவங்கி தொடர்ந்து கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக தன்னுடைய சினிமா பயணத்தை தொடர்ந்து வருகிறார்.

ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களுடன் நடித்து பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ள மீனா, தற்போதும் ரஜினி, மோகன்லால் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

சமீபத்தில் மீனாவின் கணவர் வித்யாசாகர் மல்ட்டி ஆர்கன் பெயிலியரால் உயிரிழந்த நிலையில், அந்த துக்கத்திலிருந்து தற்போது மீண்டு வருகிறார்.

நடிகை மீனா

நடிகை மீனா

நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக ரஜினி உள்ளிட்டவர்களுடன் நடித்து சிறப்பான வரவேற்பை பெற்ற நிலையில், நாயகியாகவும் ரஜினி, கமல், சரத்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். இவரது பல படங்கள் வெற்றியை தேடித் தந்துள்ளன.

விஜய்யுடன் நடித்த நைனிகா

விஜய்யுடன் நடித்த நைனிகா

தொடர்ந்து ஒரு கட்டத்தில் வித்யாசாகர் என்ற சாப்ட்வேர் இஞ்சினீயரை திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆன மீனாவிற்கு, நைனிகா என்ற மகளும் உள்ளார். இவர்கள் இருவரும் படங்களில் நடித்து வந்தனர். விஜய்யுடன் தெறி படத்தில் நடித்த நைனிகா தொடர்ந்து அரவிந்த் சாமியுடனும் பாஸ்கர் தி ராஸ்கல் படத்திலும் நடித்திருந்தார்.

மிகப்பெரிய இடி

மிகப்பெரிய இடி

இதனிடையே மீனாவின் குடும்பத்தில் மிகப்பெரிய இடியாக அவரது கணவர் வித்யாசாகர், மல்ட்டி ஆர்கன் பெயிலியரால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதையடுத்து திரையுலகமே ஒன்று திரண்டு மீனாவிற்கு ஆறுதல் கொடுத்தது. சில மாதங்கள் தன்னுடைய வீட்டிலேயே முடங்கிய மீனா, தற்போது தன்னுடைய துக்கத்திலிருந்து மீண்டு வருகிறார்.

மீண்டுவரும் மீனா

மீண்டுவரும் மீனா

தொடர்ந்து தனக்கு நெருக்கமானவர்களுடன் தன்னுடைய பொழுதை சிறப்பாக போக்கிவந்த மீனா, அவர்களின் பிறந்தநாள் உள்ளிட்டவற்றிற்கு ஆறுதல் கூறுவதையும் வழக்கமாக்கிக் கொண்டுள்ளார் மீனா. இந்நிலையில் தற்போது வெளிநாட்டில் தன்னுடைய சுற்றுலா கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

செல்ஃபிக்கள் வெளியிட்ட மீனா

செல்ஃபிக்கள் வெளியிட்ட மீனா

இதையொட்டி அதிகமான செல்ஃபிக்களை வெளியிட்டுள்ளார். இந்த ஆண்டின் சிறப்பான கொண்டாட்டமாக செல்ஃபிக்களுடன் துவங்கியுள்ளதாக அவர் இந்தப் புகைப்படங்களின் கேப்ஷனில் தெரிவித்துள்ளார். மிகவும் கலர்புல்லான புகைப்படங்களை அவர் இந்தப் பதிவில் வெளியிட்டுள்ளார். தான் எப்போதும் செல்ஃபி புள்ள என்றும் அவர் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X