இதை மட்டும் வெளியே சொல்லிடாத அவ்வளவுதான்.. ஷூட்டிங்கில் மீனாவை மிரட்டிய பிரபு
சென்னை: குழந்தை நட்சத்திரமாக இருக்கும்போதே மீனா ஏறத்தாழ 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார். இதன் காரணமாக மீனா எல்லோருக்கும் பரிச்சயமானவராக மாறிவிட்டார். அதர்கு பிறகு ஹீரோயினாக அறிமுகமாகி 90களில் கோலிவுட், டோலிவுட்டில் தனது கொடியை உயர பறக்கவிட்டவர் அவர். பல படங்களில் நடித்திருக்கும் அவர் ஏராளமான ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். இப்போது ஒரு சில படங்களில் நடித்துவரும் அவர் நடன அமைப்பாளர் கலாவிடம் கொடுத்த பேட்டி கவனம் ஈர்த்திருக்கிறது.
ராஜ்கிரண் நடிப்பில் வெளியான என் ராசாவின் மனசிலே படத்தில் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார் மீனா. அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. முக்கியமாக குழந்தை நட்சத்திரமாக ஜொலித்த மீனாவா இவர் என்று அப்போதைய ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். அந்தப் படத்துக்கு பிறகு மீனாவுக்கு தமிழில் ஏகப்பட்ட வாய்ப்புகள் கிடைத்தன. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் ரஜினி, கமல், சரத்குமார்,சத்யராஜ் உள்ளிட்ட பல ஹீரோக்களுடன் நடித்தார்.

ரஜினி கெமிஸ்ட்ரி: தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் ரவுண்டு கட்டி நடித்தார் மீனா. இதன் காரணமாக பல வருடங்கள் தென் மாநிலங்களின் கனவுக்கன்னியாக ஜொலித்தார். மீனா எத்தனை ஹீரோக்களுடன் நடித்திருந்தாலும் ரஜினியுடன் அவருக்கு இருந்த கெமிஸ்ட்ரி மற்ற ஹீரோக்களிடம் குறைவாகவே இருந்ததாக பெரும்பாலான ரசிகர்கள் கூறினர். இருவரும் நடித்த எஜமான், வீரா, முத்து உள்ளிட்ட படங்கள் மெகா ஹிட்டாகின. கடைசியாக இருவரும் சேர்ந்து அண்ணாத்த படத்தில் நடித்திருந்தனர்.
சிறந்த நடிகை: மீனா எந்த கேரக்டருக்கும் செட் ஆகக்கூடியவர். அவரால் முத்து படத்தில் தில்லானா தில்லானா பாடலுக்கு செம டான்ஸ் ஆடவும் முடியும்; பொற்காலம் படத்தில் பக்குவமான நடிகையாக மிளிரவும் முடியும். 90கள் இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் மீனா. அவருக்கு போட்டியாக அந்த காலக்கட்டத்தில் ரம்பா, சௌந்தர்யா, நக்மா என ஏகப்பட்ட நடிகைகள் தமிழ் சினிமாவில் இருந்தாலும் மீனா தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்திருந்தார்.
திருமணம்: தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வந்த மீனா வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிக்கு நைனிகா என்ற பெண் குழந்தை இருக்கிறார். அவர் விஜய்யுடன் தெறி படத்தில் நடித்தார்.மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த திருமண வாழ்க்கையில் வித்யாசாகர் மரணத்தை மீனா எதிர்பார்க்கவில்லை. இதன் காரணமாக மீனா சோகத்தின் உச்சத்துக்கே சென்றார். தொடர்ந்து அவருடன் நடித்தவர்கள் மீனாவை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தனர்.
மீனா பேட்டி: இந்நிலையில் அவர் சமீபத்தில் தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியை மீனாவின் நெருங்கிய தோழியும், நடன அமைப்பாளருமான கலா மாஸ்டர் எடுத்தார். அந்தப் பேட்டியில் பேசிய மீனா, "ஒருமுறை பிரபுவுடன் நான் ஜோடியாக நடித்தபோது அவருடன் ஏற்கனவே நான் குழந்தை நட்சத்திரமாக நடித்தது குறித்து கூறினேன். அவருக்கு பெரிய ஆச்சரியம்.
வெளியே சொல்லிடாத: ஆச்சரியப்பட்ட அவர், இந்த விஷயத்தை மட்டும் நீ வெளியே சொன்னால் அவ்வளவுதான் என்று மிரட்டினார். ஏனெனில் குழந்தை நட்சத்திரமாக தன்னுடன் நடித்தவர் ஹீரோயினாக நடிக்கிறார் என்று வெளியே தெரிந்தால் தனது வயது என்ன என்பது தெரிந்துவிடும் என்பதால் அவர் விளையாட்டாக மிரட்டினார்" என்றார்.


Click it and Unblock the Notifications











