Meena: லண்டனில் மீனா.. அடுத்தடுத்த புகைப்படங்கள்.. தனிமையில் இனிமை!

லண்டன்: நடிகை மீனா அடுத்தடுத்து ரசிகர்களை கவரும் வகையில் படங்களில் நடித்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் கால் பதித்த மீனா தொடர்ந்து நாயகியாகவும் தற்போது கேரக்டர் ரோல்களிலும் சிறப்பாக நடித்து வருகிறார். தற்போது மோகன்லால், ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து மீனா நடித்து வருகிறார்.

இந்நிலையில் அடுத்ததாக அஜித்துடன் குட் பேட் அக்லி படத்தில் மீனா ஜோடியாக நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சிம்ரனும் இந்த ரேசில் உள்ளதால் யார் அஜித்திற்கு ஜோடியாக இணைவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தன்னுடைய கணவர் மரணத்தால் சிறிது காலங்கள் நடிக்காமல் முடங்கியிருந்த மீனா, மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தவுள்ளார்.

Actress Meena spends her holiday in London and shared cute photos

நடிகை மீனா: நடிகை மீனா சிறுமியாகவே தன்னுடைய நடிப்பு பயணத்தை துவங்கியவர். ரஜினிகாந்த், சிவாஜி கணேசன் என தன்னுடைய சிறு வயதிலேயே முன்னணி நடிகர்களுடன் அவர் இணைந்து நடித்துள்ளார். ராஜ்கிரணுடன் இணைந்து தமிழில் என் ராசாவின் மனசிலே படத்தில் இணைந்து நடித்திருந்தார். இந்த படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்த போதிலும் தன்னுடைய அப்பாவித்தனமான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து தொடர்ந்து ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் அளவிற்கு ரசிகர்களை கவர்ந்திருந்தார். ரஜினியுடன் இவர் நடித்திருந்த எஜமான், முத்து போன்ற படங்களும் சிறப்பாக கை கொடுத்தன.

வயதுக்கு ஏற்ற கேரக்டர்கள்: இந்நிலையில் தற்போது வரை அடுத்தடுத்த படங்களை தன்னுடைய வயதுக்கு ஏற்றாற்போல கமிட் செய்து நடித்து வருகிறார் மீனா. தன்னுடைய திருமணம், குழந்தை பிறப்பு, கணவரின் இறப்பு என எதுவும் தன்னுடைய கேரியரை பாதிக்கும்படி விடவில்லை. தன்னுடைய கணவர் இறப்பால் மனதளவில் மிகப்பெரிய அளவில் முடங்கிப் போனார் மீனா. அவரது தோழிகள் அவருக்கு சிறப்பாக கை கொடுத்து சூழலில் தற்போது தன்னுடைய துக்கத்தில் இருந்து வெளிவந்துள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்த சுற்றுலாக்களில் மீனாவை பார்க்க முடிகிறது. தற்போது லண்டனில் சுற்றுலாவில் உள்ள மீனா. அங்கு அடுத்தடுத்த லொகேஷன்களில் புகைப்படங்களை எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

லண்டனில் மீனா: இந்தப் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள சூழலில், இவருக்கு மட்டும் வயதே ஆகாதா என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர். அடுத்ததாக அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் மீனா இணைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ரேசில் சிம்ரனும் உள்ள சூழலில் யார் அஜித்துடன் இணைவார்கள் என்பது குறித்து விரைவில் படக்குழு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

க்யூட் நடிப்பிற்கு சொந்தக்காரர்: தமிழ் சினிமாவில் ஏராளமான நடிகைகள் நடித்துள்ள போதிலும் தனக்கென தனியிடத்தை பிடித்துள்ளார் மீனா. ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்து வரவேற்பை பெற்று, தொடர்ந்து அவருக்கே ஜோடியாக நடித்த பெருமை இவருக்கு உண்டு. தொடர்ந்து தென்னிந்தியாவின் முன்னணி நாயகியாக ஏராளமான முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள மீனாவின் மகள் நைனிகாவும் விஜய்யின் தெறி உள்ளிட்ட சில படங்களில் நடித்து மீனாவை போலவே தன்னுடைய க்யூட் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X