ரஜினிகாந்துடன் மீனா திடீர் சந்திப்பு.. என்ன விஷயம் தெரியுமா?

சென்னை: நடிகை மீனா சிவாஜி, ரஜினி, கமல், சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து குழந்தை நட்சத்திரமாக பல நடிகர்களுடன் நடித்திருந்தாலும், ரஜினிக்கு மகளாகவும், ஜோடியாகவும் நடித்தது தான் தற்போது வரை பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகை மீனா, ரஜினியுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோ லைக்குகளை குவித்து வருகிறது.

90 கால கட்டத்தில் தமிழ் சினிமாவின் தவிர்க்கவே முடியாத ஒரு நட்சத்திர நடிகையாக திகழ்ந்தவர் நடிகை மீனா. இவர் ராஜ்கிரனுடன் இணைந்து 'என் ராசாவின் மனசிலே' படத்தில் ஹீரோயினாக நடித்தார். முதல்படமே வெற்றி பெற்றது. அந்த படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணைந்து எஜமான் படத்தில், மீனா ஜோடி என்று சொன்னவுடன் அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் மகளாக நடித்து விட்டு எஜமான் படத்தில் ஜோடியா என அனைவரும் ஷாக் ஆனார்கள்.

Meena Rajikanth
Photo Credit:

ரஜினிகாந்துக்கு ஜோடி: நடிகை மீனா, சிவாஜி, ரஜினி, கமல், சத்யராஜ் என பல முன்னணி நடிகர்களுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக ரஜினிகாந்துடன் அன்புள்ள ரஜினிகாந்த், எங்கேயோ கேட்ட குரல் படத்தில் அவருக்கு மகளாக நடித்த மீனா, அதன்பிறகு, எஜமான், முத்து, வீரா, உள்ளிட்ட பல படங்களில் அவருடன் ஜோடியாக நடித்தது தற்போது வரை பேசப்பட்டு வருகிறது. அதன்பிறகு பல ஆண்டுகள் கழித்து மீண்டும் மீனா அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்துக்கு அத்தை பெண்ணாக நடித்திருந்தார்.

திடீர் சந்திப்பு: தற்போது மீனா தனது இன்ஸ்டாகிராமில் ரஜினிகாந்தை விமான நிலையத்தில் எதார்ச்சையாக சந்தித்த போது எடுத்த போட்டோவை பகிர்ந்துள்ளார். விமானத்தில் பயணிக்கத் தயாராக இருந்த இருவரும் சிரித்த முகத்துடன் போஸ் கொடுத்துள்ள அந்த படம், ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது. "என்றும் அழகான நினைவுகள்", "சூப்பர் ஸ்டார் - சூப்பர் ஜோடி" போன்ற கமெண்ட்களுடன் அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சினிமாவில் தந்தை-மகள், காதல் ஜோடி, உறவுக்காரர் என பல்வேறு உறவுகளை வெளிப்படுத்திய ரஜினிகாந்த் - மீனா இணை, இன்றும் ரசிகர்களின் நினைவுகளில் தனிச்சிறப்புடன் இடம்பிடித்திருப்பதை இந்த புகைப்படம் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

More from Filmibeat

Read more about: meena rajikanth மீனா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X