Meena - அரசியலில் குதித்துவிட்டாரா மீனா?.. பாஜகவில் இணைந்துவிட்டாரா?.. ட்ரெண்டாகும் புகைப்படம்

சென்னை: நடிகை மீனா 90களில் கோலிவுட், டோலிவுட்டை ஒரு கலக்கு கலக்கியவர். ரஜினிகாந்த், கமல் ஹாசன், அஜித், விஜயகாந்த், சத்யராஜ் என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர். கண்ணழகி மீனா என்றும் அவரை அழைப்பதுண்டு. அவர் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் கணவர் உயிரிழந்துவிட்டார். இவருக்கு நைனிகா என்ற மகளும் இருக்கிறார்.

குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானவர் மீனா. குழந்தை நட்சத்திரமாக இருக்கும்போதே ஏறத்தாழ 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார். இதன் காரணமாக மீனா எல்லோருக்கும் பரிச்சயமானவராக மாறிவிட்டார். அதன் பிறகு தமிழில் ராஜ் கிரண் நடித்த என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் மீனா. அந்தப் படம் மெகா ஹிட்டானது. குறிப்பாக மீனா சோலையம்மா என்ற கதாபாத்திரத்தில் கலக்கியிருந்தார்.

Actress Meena Will Enter in Politics and join BJP

கனவுக்கன்னி மீனா: என் ராசாவின் மனசிலே படத்துக்கு பிறகு மீனாவுக்கு தமிழில் ஏகப்பட்ட வாய்ப்புகள் கிடைத்தன. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் ரஜினி, கமல், சரத்குமார்,சத்யராஜ் உள்ளிட்ட பல ஹீரோக்களுடன் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் ரவுண்டு கட்டி நடித்தார் மீனா. இதன் காரணமாக பல வருடங்கள் தென் மாநிலங்களின் கனவுக்கன்னியாக ஜொலித்தார்.

ரஜினி கெமிஸ்ட்ரி: மீனா எத்தனை ஹீரோக்களுடன் நடித்திருந்தாலும் ரஜினியுடன் அவருக்கு இருந்த கெமிஸ்ட்ரி மற்ற ஹீரோக்களிடம் குறைவாகவே இருந்ததாக பெரும்பாலான ரசிகர்கள் கூறினர். இருவரும் நடித்த எஜமான், வீரா, முத்து உள்ளிட்ட படங்கள் மெகா ஹிட்டாகின. ரஜினிக்கு மீனா ஜோடியாக நடிக்கும் முன்பே குழந்தை நட்சத்திரமாக அவருடன் அன்புள்ள ரஜினிகாந்த் படத்திலும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

திருமணம்: தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வந்த மீனா வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிக்கு நைனிகா என்ற பெண் குழந்தை இருக்கிறார். மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த திருமண வாழ்க்கையில் வித்யாசாகர் மரணத்தை மீனா எதிர்பார்க்கவில்லை. இதன் காரணமாக மீனா சோகத்தின் உச்சத்துக்கே சென்றார். தொடர்ந்து அவருடன் நடித்தவர்கள் மீனாவை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தனர்.

குழந்தையும் நடிகை: மீனா போன்றே அவரது மகளான நைனிகாவும் சினிமாவில் நடித்திருக்கிறார். முதல் படமே விஜய்யுடன் தெறி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை அதற்கு பிறகு நைனிகா நடிக்கவில்லை. அதற்கு காரணம் அவரது படிப்புதான் என மீனா சில பேட்டிகளில் பகிர்ந்திருக்கிறார். முக்கியமாக சினிமாவைவிட அவளது கல்விதான் காப்பாற்றும் என ஆணித்தரமாக கூறுகிறர் மீனா.

அரசியலில் மீனா?: இந்நிலையில் சமீபத்தில் வெளியான புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மீனா அரசியலில் குதித்துவிட்டாரா என்று கேள்வி எழுப்பிவருகின்றனர். அதாவது நேற்று டெல்லியில் பொங்கல் விழா நடந்தது. அதில் பிரதமர் மோடி வேட்டி சட்டை அணிந்துகொண்டு கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில்தான் கலா மாஸ்டர், மீனா உள்ளிட்டோர் கலந்துகொண்டிருக்கின்றனர்.

இதனை பார்த்துவிட்டுதான் ஒருவேளை மீனா பாஜகவில் சேர்ந்துவிட்டாரோ என்ற கேள்வியை முன்வைக்கிறார்கள் ரசிகர்கள். ஆனால் ஒருதரப்பினர், கலா மாஸ்டர் மீனாவுக்கு ரொம்பவே நெருக்கம். எனவே அவரது அழைப்பின் பேரில்கூட மீனா கலந்துகொண்டிருக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் கமெண்ட்ஸை பார்க்க முடிகிறது.

More from Filmibeat

Read more about: meena bjp மீனா பாஜக
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X