நடிகை மீனாட்சிக்கு இன்று பிறந்தநாள்.. குவியும் வாழ்த்துக்கள் !
சென்னை : மந்திரப் புன்னகையால் நம் அனைவரையும் மயக்க வைத்து வரும் நடிகை மீனாட்சி கருப்பசாமி குத்தகைதாரர் திரைப்படத்தின் மூலம் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வந்தார்.
Recommended Video
நடிப்பிலும் கவர்ச்சியிலும் மிகச் சிறந்த நடிகையாக வலம் வந்த இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார்.
இவ்வாறு பிரபலமான நடிகையாக வலம் வரும் மீனாட்சி ஆகஸ்ட் 6 ஆம் தேதியான இன்று 38வது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி, இவரது ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

கல்கத்தாவை பூர்வீகமாக
தமிழ் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்ட நடிகையாக வலம் வரும் மீனாட்சி, கல்கத்தாவை பூர்வீகமாக கொண்டவர். இவரது இயற்பெயர் பிங்கி சர்கார் என்ற போதிலும் திரைப்படங்களுக்காக தனது பெயரை மீனாட்சி என பெயர் மாற்றம் செய்து கொண்டார்.

ராசாத்தி கதாபாத்திரத்தில்
இயக்குனரும் நடிகருமான கோவிந்த மூர்த்தி இயக்கிய 'கருப்பசாமி குத்தகைதாரர்" திரைப்படத்தில் ராசாத்தி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்து மிக பிரபலமான நடிகையாக வலம் வந்தார்.

திருப்புமுனையாக அமைந்தது
நடிகர் கரண் பல்வேறு திரைப்படங்களில் பல வேடங்களில் நடித்திருந்தாலும் கருப்பசாமி குத்தகைதாரர் திரைப்படத்தில் முழு கதாநாயகனாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்த நிலையில் இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியடைந்து காரணுக்கும் மீனாட்சிக்கும் திரைத்துறையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

அழுத்தமான கதாபாத்திரத்தில்
தாயை இழந்த ஒரு பெண், ஒரு ஆணின் உருவத்தில் தனது தாயை பார்ப்பது போன்ற மிகவும் அழுத்தமான கதாபாத்திரத்தில் "ராசாத்தி" என்ற பெயரில் கருப்பசாமி குத்தகைதாரர் திரைப்படத்தில் நடித்திருந்த மீனாட்சி, ரசிகர்களை மட்டுமல்லாமல் குடும்ப பெண்களையும் மிகவும் கவர்ந்தார்.

காமெடி திரைப்படமாக
இவ்வாறு பல்வேறு தரப்பினருக்கும் மிகவும் பரிச்சயமான நடிகையாக வலம் வந்த மீனாட்சி ராகவா லாரன்ஸ் நடிப்பில் மிகப் பெரிய காமெடி திரைப்படமாக வெளியான ராஜாதி ராஜா, மந்திரப்புன்னகை, துப்பாக்கி, வெள்ளக்காரதுரை, நானும் ரவுடிதான் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து இன்றுவரை பலரும் ரசிக்கும் மிகச்சிறந்த நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

வித்தியாசமான தலைப்புடன்
தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் கம்பேக் கொடுத்த ராம்கி வித்தியாசமான கதையில், வித்தியாசமான தலைப்புடன் வெளியான "ஆங்கில படம்" மீனாட்சி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படமாகும்.

38 வது பிறந்தநாள்
இவ்வாறு தமிழ் சினிமாவில் இன்று வரை முக்கியமான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்துவரும் மீனாட்சி ஆகஸ்ட் 6 ஆம் தேதியான இன்று தனது 38 வது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி இவரது ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











