Meenakshi chaudhary: விஜய்யோட நடிக்கறதுக்கு பதற்றமா இருக்கு.. மீனாட்சி சவுத்ரி பகிர்ந்த விஷயம்!

சென்னை: நடிகர் விஜய்யின் The greatest of all time படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. முன்னதாக படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக இலங்கை, ராஜஸ்தான் உள்ளிட்ட இடங்களில் படத்தின் சூட்டிங்கை நடத்த இயக்குநர் வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளார். இதனிடையே இந்தப் படத்தின் சூட்டிங்கை துரிதப்படுத்த நடிகர் விஜய், வெங்கட்பிரபுவிடம் கேட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் விஜய்யுடன் இந்தப் படத்தில் நடிகர்கள் பிரஷாந்த், பிரபுதேவா, மோகன், அஜ்மல், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, வைபவ் என நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. புத்தாண்டு கொண்டாட்டமாக இந்தப் படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் படத்தில் அப்பா மற்றும் மகன் என இரட்டை வேடத்தில் விஜய் நடிப்பதாக முன்னதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இருவேறு கெட்டப்புகளில் வித்தியாசமான டைம் லைனில் விஜய் நடித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

Actress Meenakshi Chaudhary hails Vijay and his dance

நடிகர் விஜய்: நடிகர் விஜய் -வெங்கட் பிரபு காம்பினேஷனில் உருவாகிவரும் படம் The greatest of All time. விஜய்யின் 68வது படமாக உருவாகிவரும் இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் பூஜையுடன் துவங்கியது. படத்தில் பிரஷாந்த், பிரபுதேவா, மோகன், அஜ்மல், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி, வைபவ், பிரேம்ஜி என நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளது. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். படத்திற்கு இதுவரை 3 பாடல்களை அவர் கம்போஸ் செய்துள்ளதாகவும் அதில் ஒரு பாடலை விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. விரைவில் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

சென்னையில் சூட்டிங்: சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் The Goat படத்தின் சூட்டிங் நடந்து முடிந்துள்ள நிலையில், தற்போது மீண்டும் சென்னையிலேயே இந்தப் படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது. சில தினங்களில் இந்த சூட்டிங் நடந்து முடியவுள்ளது. இதையடுத்து இலங்கை, ராஜஸ்தான் போன்ற இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் நடக்கவுள்ளதாக படக்குழு சார்பில் அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைவெளியில்லாமல் இந்தப் படத்தின் சூட்டிங்கை நடத்தி முடிக்க விஜய், வெங்கட் பிரபுவிற்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் சூட்டிங்கை விரைவில் முடித்து கோடை கொண்டாட்டமாக படத்தை ரிலீஸ் செய்யவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.

இருவேறு கெட்டப்புகள்: இந்தப் படத்தில் அப்பா மற்றும் மகன் என இருவேறு கெட்டப்புகளில் விஜய் நடித்துவரும் நிலையில் அப்பா விஜய்க்கு ஜோடியாக சினேகா நடித்துள்ளதாகவும் மகன் விஜய்க்கு மீனாட்சி சவுத்ரி ஜோடியாகிவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்தப் படத்தில் கமிட்டானது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள நடிகை மீனாட்சி சவுத்ரி, விரைவில் விஜய்யுடன் தனக்கு சாங் சூட்டிங் உள்ளதாக தெரிவித்துள்ளார். விஜய் மிகச்சிறந்த நடிகர் மற்றும் நல்ல டான்சர் என்பதால் அவருடன் பாடல் காட்சியில் நடிப்பதற்கு மிகவும் பதற்றமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பதற்றமான மீனாட்சி சவுத்ரி: அவர் மிகச்சிறந்த டான்சர் என்பதால் அவருக்கு ஈடுகொடுத்து எப்படி பாடல் காட்சியில் நடனமாடப் போகிறேன் என்பது குறித்து அவர் பதற்றமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். தான் எப்போதுமே விஜய்யின் மிகப்பெரிய ரசிகை என்றும் அவர் உற்சாகம் தெரிவித்துள்ளார். மேலும் விஜய் அதிகமாக மற்றவர்களுடன் பேசாமல் அமைதியாக இருப்பார் என்று குறிப்பிட்டுள்ள மீனாட்சி சவுத்ரி, முதல் நாள் சூட்டிங்கின்போது தான் மிகவும் பதற்றத்துடன் இருந்ததாகவும் ஆனால் அவர் மிகவும் சிறப்பாக நடந்துக் கொண்டார் என்றும் விஜய் மிகச்சிறந்த மனிதர் என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X