அந்த நடிகருடன் காதலா?.. திடீரென கிளம்பிய பூகம்பம்.. கோட் பட நடிகை என்ன சொன்னார் தெரியுமா?

சென்னை: நடிகை மீனாட்சி சவுத்ரி தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வருகிறார். தமிழில் விஜய் ஆண்டனியுடன் கொலை படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்திருந்த இவர் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். விஜய்யுடன் நடித்திருந்த கோட் படம் இவருக்கு சிறப்பாக அமைந்தது.

கோட் படத்தில் சில காட்சிகளிலேயே வந்திருந்த போதிலும் ஸ்டைலிஷ்ஷான லுக்கில் மீனாட்சி சவுத்ரி ரசிகர்களை கவர்ந்திருந்தார். இந்நிலையில் கடந்த அக்டோபர் 31ம் தேதி தீபாவளி கொண்டாட்டமாக வெளியான லக்கி பாஸ்கர் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ஒரு குழந்தைக்கு அம்மாவாக மீனாட்சி சவுத்ரி நடித்திருந்தார். இந்தப்படம் பான் இந்தியா படமாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

meenakshi chaudhary lucky bhaskar movie goat movie

நடிகை மீனாட்சி சவுத்ரி: தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருகிறார் நடிகை மீனாட்சி சவுத்ரி. தமிழில் விஜய் ஆண்டனியின் கொலை படம் மூலம் இவர் என்ட்ரி கொடுத்த நிலையில் அடுத்தடுத்து சிங்கப்பூர் சலூன், கோட், லக்கி பாஸ்கர் ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார். தெலுங்கிலும் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார் மீனாட்சி சவுத்ரி. இந்நிலையில் இவர் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மருமகனும் நடிகருமான சுஷாந்தை காதலித்து வருவதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தொடர்ந்து செய்திகள் பரவி வருகின்றன.

திருமண வதந்தி: இந்நிலையில் இதுகுறித்து தற்போது மீனாட்சி சவுத்ரி விளக்கம் அளித்துள்ளார். இந்த செய்தியில் உண்மை இல்லை என்றும் இது போன்ற செய்திகள் எங்கிருந்துதான் வருகின்றன என்று தெரியவில்லை என்றும் அவர் தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்துள்ளார். தான் பல படங்களில் நடித்துக் கொண்டிருப்பதாகவும் மற்ற விஷயங்களுக்கு தனக்கு நேரம் இல்லை என்றும் மீனாட்சி சவுத்ரி குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் யாரையும் காதலிக்கவில்லை என்றும் தான் சிங்களாகத்தான் இருக்கிறேன் என்றும் மீனாட்சி சவுத்ரி கூறியுள்ளார். மேலும் பிரபாஸின் சலார் 2 படத்தில் நடிப்பதாக வரும் தகவல்களும் உண்மை இல்லை என்றும் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

விஜய்யுடன் ஜோடி: விஜய்யின் கோட் படத்தில் நாயகியாக நடித்திருந்தார் மீனாட்சி சவுத்ரி. இந்த படத்தில் அவரது காட்சிகள் குறைவாக இருந்த போதிலும் இளைய தளபதியாக நடித்திருந்த விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்நிலையில் கடந்த அக்டோபர் 31ம் தேதி நடிகர் துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்து வெளியான லக்கி பாஸ்கர் படத்திலும் அவரது மனைவியாக ஒரு குழந்தையின் அம்மாவாக நடித்திருந்தார் மீனாட்சி சவுத்ரி. இந்தப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்து 100 கோடி கிளப்பிலும் இணைந்துள்ள நிலையில் மீனாட்சி சவுத்ரியின் நடிப்பும் மிகுந்த பாராட்டுகளை பெற்றுள்ளது. இந்நிலையில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் மீனாட்சி சவுத்ரி.

வதந்திக்கு முற்றுப்புள்ளி: தெலுங்கில் முன்னணி நடிகராக பல ஆண்டுகளாக தொடர்ந்து வரும் நடிகர் நாகார்ஜுனாவின் சகோதரி மகன் சுஷாந்த் அனுமோலுடன் மீனாட்சி சவுத்ரி டேட்டிங்கில் உள்ளதாகவும் விரைவில் இவர்களின் திருமணம், முன்னதாக நிச்சயதார்த்தம் நடக்கவுள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்தன. இதனிடையேதான் இதுகுறித்து மீனாட்சி சவுத்ரி பேசியுள்ளார். ஏதாவது நடப்பதாக இருந்தால் தானே அறிவிப்பேன் என்றும் இதுபோன்ற வதந்திகளை ரசிகர்கள் நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தான் சிங்கிள் என்றும் தற்போதைக்கு யாருடனும் மிங்கிள் ஆக விரும்பவில்லை என்றும் அவர் பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X