தமிழ்நாட்டு பக்கமே வராத விஜய் பட நடிகை.. திருப்பதி கோயிலில் திடீர் விசிட்.. அழகு தேவதையான மீனாட்சி

சென்னை: திருப்பதி ஏழுமலையான் உலகில் உள்ள மக்களை அனைவரையும் காத்து வருவதாக மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. குறிப்பாக சினிமா பிரபலங்கள் அனைவரும் அவர்கள் நடித்த படம் ரிலீஸ் ஆகும் நேரத்தில் திருப்பதி ஏழுமலையானை தரிசித்து வருவார்கள். தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழி படங்களில் நடிக்கும் நடிகர் முதல் நடிகைகள் வரை தரிசித்து வருகிறார்கள். பிரபலங்களின் வருகை அதிகரித்து இருப்பதால் முன்பை விட திருப்பதி ஏழுமலையான் உலகளவில் டிரெண்டிங் ஆகிவிட்டார். இந்நிலையில், விஜய் பட நடிகை ஒருவர் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் திடீர் விசிட் அடித்திருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்தாண்டு விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்தின் மூலம் பிரபலம் அடைந்தவர் மீனாட்சி சவுத்ரி. இதைத்தொடர்ந்து லக்கி பாஸ்கர், சங்கராந்தி வஸ்துன்னம் உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்து ஸ்டார் நடிகையாக ஜொலிக்க தொடங்கியுள்ளார். இவர் தமிழில் நடிப்பதற்கு முன்பே தெலுங்கில் முன்னணி நடிகையாக மாறியுள்ளார். ரவி தேஜா, மகேஷ் பாபு, வெங்கடேஷ் படங்களில் நடித்து ஹிட் ஹீரோயினாக மாறியிருக்கிறார். தமிழில் குறைந்த படங்கள் நடித்திருந்தாலும் அவருக்கென்று தனி ரசிகர்கள் இங்கு இருக்கின்றனர்.

actress-meenakshi-chaudhary-visit-at-tirupati-ezhumalaiyan-temple

மீனாட்சி சவுத்ரி நெகிழ்ச்சி: மாடலிங்கில் சாதிக்க நினைத்த மீனாட்சி சவுத்ரி மிஸ் இண்டியா ஃபெமினா பெற்ற முதல் பெண் இவர்தான் என்ற சாதனையை படைத்துள்ளார். மாடலிங் மூலம் தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கிய இவர் நடிகை ஆனது குறித்து மனம் திறந்து பேசினார். அதில், என் தந்தை ராணுவ வீரர் என்பதால் என்னை கட்டுக்கோப்பாக வளர்த்தார். என்னை அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் பங்கேற்க வைத்தார். நான் பேட்மிண்டனில் மாநில அளவிலான போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். ஆனால், நடிகை ஆனது ஒரு கனவு மாதிரி இருககிறது. நிச்சயமாக நான் நடிகை ஆவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை எனக் கூறி நெகிழ்ச்சி அடைந்தார்.

கோட் படத்தில் நடித்தது தவறு: தமிழில் கொலை படத்திற்கு பிறகு மீனாட்சி சவுத்ரி விஜய்யுடன் கோட் படத்தில் இணைந்து நடித்தார். பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் வெளியான இப்படம் சரியான விமர்சனத்தை பெறவில்லை, எனவே வசூலிலும் கொஞ்சம் சொதப்பியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தில் நடித்தது குறித்து தெரிவித்த மீனாட்சி, கோட் படத்தில் நடித்தது நான் செய்த மிகப்பெரிய தவறு. இப்படத்தால் மன உளைச்சலுக்கு ஆளானேன் என கூறினார். மேலும், படத்தில் என்னுடைய காட்சிகள் மிகவும் குறைவு, ஒரு பாடலுக்கு மட்டுமே என்னை பயன்படுத்தியுள்ளனர். படத்திற்கு எனது கதாபாத்திரம் தேவையே இல்லை என விமர்சனம் செய்து என்னை மையப்படுத்தி பல ட்ரோல் வெளியானது. அதெல்லாம் பார்க்கும் போது மன அழுத்தத்திற்கு ஆளானதாக மீனாட்சி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

actress-meenakshi-chaudhary-visit-at-tirupati-ezhumalaiyan-temple

திருப்பதி கோயிலில் தரிசனம்: தொடர்ந்து படங்களில் பிஸியாக இருந்தாலும் கடவுள் மீது நம்பிக்கை கொண்டிருக்கும் மீனாட்சி சவுத்ரி அண்மையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் வெளியானது. அதபோன்று தற்போது திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தனது குடும்பத்தினருடன் வந்த சாமி தரிசனம் செய்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும், திரை பிரபலங்கள் மகேஷ் பாபு, வெங்கடேஷ், ஜூனியர் என்டிஆர், ராஜமெளலி, அஜித், வெங்கட் பிரபு, நயன்தாரா, பூஜா ஹெக்டே வரிசையில் தற்போது மீனாட்சி சவுத்ரியும் இணைந்திருக்கிறார். பிரபலங்கள் பலரும் திருப்பதி ஏழுமலையானை தரிசித்து தனது படத்திற்கான புரோமோஷனையும் தேடுவார்கள். அதேபாணியில் மீனாட்சி சவுத்ரியும் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், கோட் பட்ததிற்கு பிறகு தமிழ்நாட்டு பக்கமே வராத மீனாட்சி சவுத்ரியை தமிழ் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். தமிழ் பக்கம் வரவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X