Meenatshi: வெட்கம் கேட்டால் என்ன தருவாய்.. மீனாட்சி சவுத்ரியின் போட்டோசை பார்த்து உருகிய ரசிகர்கள்!
சென்னை: நடிகை மீனாட்சி சவுத்ரி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வருகிறார். தன்னுடைய கேரியர் துவக்கத்திலேயே முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். விஜய், துல்கர் சல்மான்,மகேஷ் பாபு உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்து விட்டார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு வெங்கடேஷுடன் இவர் நடித்திருந்த சந்தராந்திகி வஸ்துன்னாம் படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்துள்ளது. படத்தில் மீனாட்சியின் நடிப்பும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. இவ்வாறு குறுகிய காலகட்டத்திலேயே முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளது குறித்து மீனாட்சி தனது சமீபத்திய பேட்டியில் உற்சாகம் தெரிவித்துள்ளார்.

நடிகை மீனாட்சி சவுத்ரி: நடிகை மீனாட்சி சவுத்ரி தமிழ், தெலுங்கு, மலையாள மொழிப் படங்களில் அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வருகிறார். தமிழில் விஜய் ஆண்டனியின் கொலை படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்த இவர் அடுத்தடுத்து விஜய், துல்கர் சல்மான், மகேஷ் பாபு உள்ளிட்டவர்களுடன் இணைந்து நுடித்து விட்டார். சமீபத்தில் தெலுங்குப்பட நடிகர் வெங்கடேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டவர்களுடன் இணைந்து இவர் நடித்திருந்த சங்கராந்திக்கு வஸ்துன்னாம் படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பையும் வசூலையும் குவித்தது. படத்தில் போலீஸ் அதிகாரியாக இவர் மாஸ் காட்டியிருந்தார்.

முன்னணி நடிகர்களுடன் ஜோடி: முன்னதாக தமிழில் ஆர்ஜே பாலாஜியின் சிங்கப்பூர் சலூன், விஜய்யின் கோட், மகேஷ் பாபுவுடன் குண்டூர் காரம், துல்கர் சல்மானுடன் லக்கி பாஸ்கர், வருண் தேஜுடன் மட்கா உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ள நிலையில், அடுத்தடுத்த வெற்றிப்பட நடிகை என்ற பாராட்டும் இவருக்கு குவிந்து வருகிறது. இந்த ஹிட் வரிசையில் சங்கராந்திக்கு வஸ்துன்னாம் படமும் இணைந்துள்ளது. இதனிடையே, இவ்வாறு முன்னணி நடிகர்களுடன் அடுத்தடுத்து நடித்தது தன்னுடைய அதிர்ஷ்டம் என்று மீனாட்சி சவுத்ரி தன்னுடைய சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். விஜய், மகேஷ் பாபு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடனும் வெங்கடேஷ் போன்ற மூத்த நடிகர்களுடனும் நடித்தது எளிதாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

புதிய போட்டோஷுட் புகைப்படங்கள்: சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டுவருகிறார் மீனாட்சி சவுத்ரி. அடுத்தடுத்த போட்டோஷுட் புகைப்படங்களை வெளியிட்டு ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் இன்றைய தினம் புடவையில் கிளாஸாக மீனாட்சி சவுத்ரி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மிகச்சிறப்பாக அமைந்து வருகின்றன. புடவையில்கூட மிகவும் சிறப்பாக ரசிகர்களை கவர முடியும் என்று அடுத்தடுத்து நிரூபித்து வருகிறார் மீனாட்சி சவுத்ரி. அதன் வரிசையில் இந்த புகைப்படங்களும் அமைந்து லட்சக்கணக்கான ரசிகர்களின் லைக்ஸ்களை பெற்று வருகிறது. இவரை இன்ஸ்டாகிராமில் 2.5 மில்லியன் பாலோயர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.
மீனாட்சி சவுத்ரி காதல்?: மீனாட்சி சவுத்ரி தொடர்ந்து படங்களில் கமிட்டாகி வரும் நிலையில், இவர் பிரபல தெலுங்குப்பட நடிகர் சுஷாந்தை காதலிப்பதாகவும் கூறப்படுகிறது. இச்சடா என்ற தெலுங்குப்படத்தில் நடித்தபோது இவர்கள் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுஷாந்த், தெலுங்கின் முன்னணி நடிகரான நாகார்ஜுனாவின் சகோதரி மகன். இவர்களின் திருமணம் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெலுங்கு திரைப்பட வட்டாரத்தில் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











