அடுத்த ஹீரோயின் ரெடி.. அச்சு அசல் அம்மா போலவே இருக்கு மீனாவின் மகள்.. என்னம்மா வளர்ந்துவிட்டார்!
சென்னை: தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது வரை நடித்து வரும் நடிகை தான் மீனா. கண் அழகுக்கு தமிழ்நாட்டை எழுதி வைக்கட்டுமா என்று பாடல் பாடும் அளவுக்கு, இவங்களோட கண் அழகாக இருக்கும். அந்த கண் அழகுக்காகவே ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர்கள் மகள் நைனிகா குட்டிப்பெண்ணாக இருந்தார். தற்போது இவர் வளர்ந்து அம்மாவிற்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு இருக்கிறார். நைனிகாவின் அழகிய போட்டோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
90 கால கட்டத்துல தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகை மீனா, ரஜினிகாந்த், கமல், பிரபு, சத்யராஜ், கார்த்திக், முரளி, அர்ஜூன், பிரபுதேவா, அஜித் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். தளபதி விஜய்யுடன் ஒரே ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடி உள்ளார். ரஜினிகாந்துடன் இவர் ஜோடி போட்டு நடித்த எஜமான்,வீரா, முத்து படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன. அதேபோல கமலுடன் சேர்ந்து அவ்வைசண்முகி படத்தில் நடித்திருந்தார். இந்த படம் பாக்ஸ் ஆபிசிலில் நல்ல வசூலை அள்ளியது. அந்த படங்கள் மட்டுமில்லாமல் பொற்காலம், பாரதிகண்ணம்மா, வெற்றிக்கொடி கட்டு போன்ற திரைப்படங்களில் வெற்றியால் மீனா தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத நடிகையாக மாறினார்.


நடிகை மீனா: தொடர்ந்து படத்தில் பிஸியாக நடித்துக்கொண்டு இருந்த மீனா, திடீரென சினிமாவிற்கு முழுக்குபோட்டுவிட்டு, பொறியார் வித்யாசாகரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். பின் பல ஆண்டுகள் கழித்து ஜித்து ஜோசப் இயக்கிய திரிஷ்யம் படத்தில் நடித்தார். அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த நேரத்தில் தான் மீனாவின் மகள் நைனிகா அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் 2016ம் ஆண்டு வெளிவந்த தெறி படத்தில் விஜய்யின் மகளாக நடித்து சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' என்கிற படத்தில் அமலா பாலின் மகளாக நடித்திருந்தார். அதன் பின் எந்த திரைப்படத்திலும் தலைகாட்டா நைனிகா தற்போது நன்றாக வளர்ந்து ஆளே மாறி இருக்கிறார்.
அம்மா போல அழகு: கடந்த 5ந் தேதி கலைப்புலி எஸ் தாணு அவர்களின் பேரன் ஆதித்யாவின் திருமணம் சென்னையில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் அரசியல் தலைவர்கள் திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்த விழாவிற்கு நடிகை மீதான தனது மகள் நைனிகாவுடன் வந்து இருந்தார். மிகவும் க்யூட்டா பாவாடை தாவணியில், அம்மாவை மிஞ்சும் அழகில் இருந்தார் நைனிகா. அந்த போட்டோ பார்த்த பலர் தெறி பட பாப்பாவா இது என இணையத்தில் போட்டோவை டிரெண்டாக்கி வருகின்றனர். பலரும் அந்த போட்டோவிற்கு லைக்குகளை குவித்து, அடுத்த ஹீரோயின் ரெடி என கம்மெண்ட் பாக்ஸில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அழகான குட்டிப்பெண்ணான நைனிகாவிற்கு தற்போது 14 வயதாகிறது. நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் தொற்று காரணமாக கடந்த 2022 ஆம் ஆண்டு உயிரிழந்தார். இதனால், வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்த மீனா, தற்போது அந்த கவலையில் இருந்த மீண்டு வந்துள்ள அவர் தொலைக்காட்சி ஒன்றில் நடுவராக கலந்து கொண்டார்.


Click it and Unblock the Notifications











