Meenatchi Chaudhry: சந்தானத்திற்கு ஜோடியான விஜய் பட நாயகி.. விரைவில் சூட்டிங்!
சென்னை: நடிகர் விஜய்யுடன் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார் நடிகை மீனாட்சி சவுத்ரி. இந்த படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகி வருகின்றன. படத்தில் அப்பா மற்றும் மகன் என இருவேறு கேரக்டர்களில் விஜய் நடித்துள்ளார்.
அப்பா விஜய்க்கு சினேகா ஜோடியாகியுள்ளார். இவர்களது காம்பினேஷனில் இன்றைய தினம் படத்தின் 2வது சிங்கிள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மகன் விஜய்க்கு மீனாட்சி சவுத்ரி ஜோடியாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் சந்தானத்துக்கு ஜோடியாக நடிக்க மீனாட்சி சவுத்ரி கமிட்டாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் இணைந்துள்ளார் பிரபல தெலுங்கு பட நடிகை மீனாட்சி சவுத்ரி. இந்தப்படத்தில் அப்பா -மகன் என இரு வேறு கேரக்டர்களில் விஜய் நடித்துள்ள நிலையில் அப்பா விஜய்க்கு சினேகா ஜோடியாகியுள்ளார். இதே போல மகன் விஜய்க்கு மீனாட்சி சவுத்ரி ஜோடியாக நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. நடிகை திரிஷாவும் விஜய்யுடன் இணைந்து பாடல் ஒன்றில் ஆட்டம் போட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் நடிகர் விஜய் மூன்று வித்தியாசமான கேரக்டர்களில் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ள சூழலில் மீனாட்சி சவுத்ரி யாருக்கு ஜோடியாக நடித்திருப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கோட் படம்: இன்றைய தினம் நடிகர் விஜய்யின் பிறந்தநாளையொட்டி நடிகை மீனாட்சி சவுத்ரி அவருக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். முன்னதாக மோகன், லைலா ஆகியோரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில் மீனாட்சி சவுத்ரியும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார். இந்நிலையில் தமிழில் அடுத்ததாக நடிகர் சந்தானத்துடன் மீனாட்சி சவுத்ரி ஜோடி சேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் ஆர்யா தயாரிப்பில் சந்தானம் அடுத்ததாக டிடி ரிட்டன்ஸ் 2 படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் சூட்டிங் இம்மாதத்தில் துவங்க உள்ளதாக கூறப்பட்டது.
சந்தானத்திற்கு ஜோடியான மீனாட்சி சவுத்ரி: இந்நிலையில் இந்த படத்தில் நடிகை மீனாட்சி சவுத்ரி சந்தானத்திற்கு ஜோடியாக இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக சந்தானத்திற்கு யாரை ஜோடியாக இணைப்பது என்பது குறித்து படத்தின் இயக்குனர் தொடர்ந்து பல சாய்ஸ்களை மேற்கொண்டு வந்த சூழலில் தற்போது மீனாட்சி சவுத்ரி படத்தில் இணைந்துள்ளார். விஜய்யுடன் மீனாட்சி சவுத்ரி இணைந்துள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில் அடுத்ததாக சந்தானத்துடன் இணையவுள்ளார்.
டிடி ரிட்டர்ன்ஸ் 2 படம்: முன்னதாக வெளியான டிடி ரிட்டர்ன்ஸ் படம் சந்தானத்திற்கு மிகச்சிறப்பாக கை கொடுத்த நிலையில் தற்போது இந்த படத்தின் அடுத்த பாகம் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படததின் சூட்டிங் தள்ளிப்போன நிலையில் விரைவில் சூட்டிங் குறித்த அப்டேட்டை படக்குழுவினர் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். முன்னதாக டிடி ரிட்டர்ன்ஸ் படம் கடந்த 2023ம் ஆண்டில் வெளியாகி நல்ல வரவேற்பையும் 40 கோடிகளுக்கும் அதிகமான வசூலையும் பெற்றது குறிபிபடத்தக்கது.


Click it and Unblock the Notifications











