Meera Chopra: 40 வயதில் நடிகை நிலாவிற்கு திருமணம்.. நீண்டநாள் காதலரை கரம் பிடித்தார்!
சென்னை: அன்பே ஆருயிரே, ஜாம்பவான், லீ, மருதமலை, காளை உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளவர் நடிகை நிலா. பாலிவுட்டில் மீரா சோப்ரா என்ற பெயரில் அடுத்தடுத்த படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, கன்னட மொழிகளிலும் நடித்துள்ள நிலா, கடந்த 3 ஆண்டுகளாக ரக்ஷீத் என்பவரை காதலித்து வந்தார். 40 வயதான போதிலும் திருமணம் செய்யாமல் இருந்த அவர் தற்போது ரக்ஷீத்தை திருமணம் செய்துள்ளார். இவர்களது திருமணம் ராஜஸ்தானில் நடந்து முடிந்துள்ளது. இந்த திருமணம் குறித்து கடந்த மாதத்திலேயே நிலா அறிவித்திருந்தார். இந்நிலையில் தனது திருமண புகைப்படங்களையும் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
முன்னதாக நடிகர் மற்றும் இயக்குநர் எஸ்ஜே சூர்யாவின் அன்பே ஆருயிரே படம் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்திருந்தார் மீரா சோப்ரா. இவரது சொந்த பெயரை நிலா என மாற்றினார் எஸ்ஜே சூர்யா. பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் உறவினரான மீரா சோப்ரா அந்த அடையாளத்துடனேயே படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றிருந்தார். தொடர்ந்து அடுத்தடுத்த தமிழ்ப் படங்களில் நடித்த நிலா, இறுதியாக கில்லாடி என்ற படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ் படங்களில் அவர் நடிக்கவில்லை. பாலிவுட்டில் படங்களில் நடித்துவந்த நிலையில் தற்போது தன்னுடைய திருமணத்தை முடித்துள்ளார்.

நடிகை நிலா: நடிகர் மற்றும் இயக்குநர் எஸ்ஜே சூர்யாவின் கண்டுபிடிப்பு மீரா சோப்ரா. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் நடித்துள்ள இவர், தமிழில் நிலா என்ற பெயரில் நடித்து வந்தார். எஸ்ஜே சூர்யாவின் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான அன்பே ஆருயிரே படத்தின்மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். சிம்ரன், ஜோதிகா உள்ளிட்டவர்கள் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் நிலா, தன்னுடைய அழகு, கவர்ச்சி ஆகியவற்றால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்தார். ஜாம்பவான், லீ, மருதமலை, காளை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நிலா கடைசியாக தமிழில் கில்லாடி என்ற படத்தில் நடித்திருந்தார்.
நிலாவிற்கு திருமணம்: இதையடுத்து அவர் அடுத்தடுத்த படங்களில் நடிக்கவில்லை. 40 வயதாகும் நிலாவின் திருமணம் குறித்து தொடர்ந்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இதனிடையே கடந்த 3 ஆண்டுகளாக தான் காதலித்து வந்த ரக்ஷீத் என்பவரை இன்றைய தினம் அவர் திருமணம் செய்துள்ளார். இது குறித்து கடந்த மாதத்திலேயே அறிவித்திருந்தார் நிலா. ஆனால் ரக்ஷீத் குறித்த எந்த தகவலையும் அவர் பகிரவில்லை. இந்நிலையில் இன்றைய தினம் இவர்களது திருமணம் ராஜஸ்தானில் பிரபலமான ரெசார்ட்டில் நடந்து முடிந்துள்ளது. இதன் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் நிலா பகிர்ந்துள்ளார்.

நிலா -ரக்ஷீத் திருமணம்: இனிமேல் மகிழ்ச்சி, சண்டை, சிரிப்பு, கண்ணீர் மற்றும் நினைவுகள் தன்னுடைய வாழ்க்கையில் அதிகமாக இருக்கும் என்றும் இந்த புகைப்படங்களில் அவர் குறிப்பிட்டுள்ளார். சிவப்பு நிற காக்ராவில் இந்தப் புகைப்படங்களில் ஜொலிப்பாக காணப்படுகிறார் நிலா. அவருக்கு பொருத்தமாக ரக்ஷீத்தும் வெள்ளை நிறத்தில் உடையணித்து சிறப்பாக காணப்பட்டார். இந்த ஜோடியின் திருமணத்திற்கு ஏராளமான திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலமாக வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
பாலிவுட்டில் ரீ என்ட்ரி: தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் இல்லாத போதிலும் பாலிவுட்டில் நடித்து வருகிறார் மீரா சோப்ரா. தமிழில் நிலாவாகவும் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிப் படங்களில் மீரா சோப்ராவாகவும் நடித்து வந்தார் மீரா சோப்ரா. பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் தன்னுடைய தந்தையின் ஹோட்டல் தொழிலை செய்து வந்தார் மீரா சோப்ரா. தற்போது மீண்டும் பாலிவுட்டில் ரீ என்ட்ரி கொடுத்துள்ள மீரா சோப்ரா நடிப்பில் கடந்த ஆண்டில் சபத் என்ற படம் வெளியானது. தொடர்ந்து தற்போது வெப் தொடர் ஒன்றில் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











