படப்பிடிப்பில் குளிப்பதற்கு மினரல் வாட்டர் கேட்ட நடிகை.. கடுப்பான இயக்குநர்!

சென்னை: ஹீரோயின் என்றாலே ஓவர் பில்டப் போட்டு சீன் போடுவார்கள், அதுவும் அவர்கள் நடித்த படம் நன்றாக ஓடிவிட்டால் இந்த நடிகைகளை கையில் பிடிக்கவே முடியாது அப்படித்தான், பாலிவுட்டில் இருந்த வந்த ஒரு நடிகை படப்பிடிப்புத் தளத்தில் குளிப்பதற்கு மினரல் வாட்டர் கேட்டு அலப்பறை செய்துள்ளார். இந்த சம்பவத்தை இயக்குநர் ஒருவர் பேட்டியில் கூடிறியுள்ளார்.

இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் உருவான அன்பே ஆருயிரே படத்தின் மூலம் தமிழில் நிலா என் என் என்ற பெயரில் அறிமுகம் ஆனார். இந்த படம் வரவேற்பை பெற்றதத்தை தொடர்ந்து தமிழில் ஜாம்பவான், லீ, மருதமலை, காளை, ஜகன்மோகினி உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவற்றில் மருதமலை படம் மட்டுமே ஓரளவு ஓடியது.

Meera Chopra Meera Chopra interview

நடிகை நிலா: தமிழில் நடித்துக்கொண்டிருந்த போதே தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்து வந்தார் நிலா. இவர் தமிழில் கடைசியாக எஸ்.ஜே.சூர்யா இயக்கிய படமான இசை படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். அதனையடுத்து தமிழில் கில்லாடி படத்தில் நடித்தார். பிறகு தமிழில் நடிக்கவில்லை.இதன்பிறகு தமிழ் சினிமாவில் வாய்ப்பு இல்லாததால், பாலிவுட் சென்று அங்கு ஒரு சில படத்தில் நடித்தார்.

திருமணம்: இதையடுத்து கடந்த மார்ச் மாதம் தனது 41வது வயதில், தனது நீண்ட நாள் காதலரும் தொழிலதிபருமான ரக்‌ஷித் கெஜ்ரிவாலை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம், ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் நடிகை பிரியங்கா சோப்ரா தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார். திருமணத்திற்கு பின் மீரா சோப்ரா ஹோட்டல் தொழிலை கவனித்து வருகிறார்.

இயக்குநர் பேட்டி: இந்நிலையில் பிரபல இயக்குநர் ஒருவர் நடிகை மீரா சோப்ரா பற்றிய ஒரு தகவலை அண்மையில் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார். ஜாம்பவான் படத்தின் போது எனக்கும் மீரா சோப்ராவுக்கும் பல முட்டிக்கொண்டது, ஒரு கட்டத்தில் அது பிரச்சனையாகவே மாறிவிட்டது என்றார். குற்றாலத்தில் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்தது, படத்தின் ஒரு காட்சிக்காக குற்றாலம் அருவி கீழே ஒரு குளிக்கும் காட்சி எடுக்க வேண்டும். இதற்காக அங்கிருந்த டாங்கில் தண்ணீரை நிரப்பி காட்சியை எடுக்க ரெடியானோம்.

குளிப்பதற்கு மினரல் வாட்டர்: ஸ்பார்ட்டுக்கு வந்த மீரா சோப்ரா, இந்த தண்ணில எல்லாம் குளிக்கமாட்டேன் எனக்கு மினரல் வாட்டர் நிரப்ப சொன்னாங்க என்று கேட்டார். அந்த டாங்க் 12ஆயிரம் லிட்டர் தண்ணீல் பிடிக்கும் டேங்க் அதில், எவ்வளவு மினரல் வாட்டரை ஊற்றுவது இருந்தாலும், நான் தயாரிப்பாளரிடம் சொன்னேன், அவர் என்னை ஏறஇறங்க பார்த்துவிட்டு முடியாது என்று கூறிவிட்டார். இதை சோப்ராவிடம் சொன்னதும், கோவித்துக்கொண்டு ஷூட்டிங்கை விட்டு சென்றுவிட்டார்கள் என்று எழில் காமெடியாக கூறியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X