மவுனம் உடைக்க விரும்புகிறோம்.. சுஷாந்த் மரணத்துக்குப் பின் முடிவுக்கு வந்துவிட்டதா? நடிகை கேள்வி!

By

மும்பை: நடிகர்கள் ஏன் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்கிற மவுனத்தை உடைக்க நினைக்கிறோம் என்று பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.

தமிழில் எஸ்.ஜே.சூர்யாவின் அன்பே ஆருயிரே படத்தில் நிலா என்ற பெயரில் அறிமுகமானவர் மீரா சோப்ரா.

பிரஷாந்தின் ஜாம்பவான், சிபிராஜின் லீ, அர்ஜுனின் மருதமலை, கில்லாடி உட்பட பல படங்களில் நடித்தார்.

மீண்டும் நடிக்க

மீண்டும் நடிக்க

தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வந்த நிலா, இடையில் சில காலம் அதிக படங்களில் நடிக்காமல் இருந்தார். இப்போது மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார். வெப்சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டுக்குள் முடங்கி இருக்கும் அவர், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். அடிக்கடி எதையும் பதிவு பண்ணும் அவர், சில அதிரடி கருத்துக்களையும் தெரிவிப்பார்.

சினிமா சிஸ்டம்

அவர், இப்போது சுஷாந்த் சிங் தற்கொலை பற்றி ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது: நடிகர்கள் ஏன் தற்கொலை செய்துகொள்கிறார்கள், அவர்களை அந்த விளிம்புக்கு கொண்டு செல்வது எது என்கிற மவுனத்தை நான் உட்பட பலர் உடைக்க நினைக்கிறோம். இந்த சினிமா சிஸ்டம் எப்படி உங்களுக்கு எதிராக செயல்படுகிறது?

ஆதரவு தெரிவிப்பார்கள்?

ஆதரவு தெரிவிப்பார்கள்?

சில இயக்குனர்கள், உணர்வு ரீதியாகவும் இரக்கமில்லாமலும் எப்படி சுரண்டுகிறார்கள்? (சில முதிர்ச்சியடைந்த இயக்குனர்கள் அதை செய்வதில்லை. அதற்கு கல்வி முக்கிய அங்கம் வருகிறது) நானும் அந்தச் சூழலில்தான் இருந்து கொண்டிருக்கிறேன், இப்போதும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறேன். இதுபற்றி வெளிப்படையாக பேசினால், எத்தனை பேர் உங்களுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள். அல்லது எத்தனை பேர் உங்களுடன் நிற்பார்கள்?

Recommended Video

Tapsee Pannu Shocking! என்னையும் ஒதுக்கீடாங்க | Nepotism
சுயமரியாதை

சுயமரியாதை

சுஷாந்த் சிங்கின் மரணத்துக்குப் பிறகு எதுவும் முடிவுக்கு வந்துவிட்டதா? இல்லை. அனைத்துக்கும் பயம்தான் கடைசியாக அந்த முடிவை எடுக்க வைக்கிறது. அது வேலையை பற்றியது இல்லை. அதைத்தாண்டி இன்டஸ்ட்ரியில் அதிகமான விஷயங்கள் இருக்கிறது. உங்கள் சுயமரியாதை, கண்ணியம், கொள்கை, முக்கியமாக உங்கள் அமைதி. இவ்வாறு நடிகை மீரா சோப்ரா கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X