'அப்பவே நீங்க அழகு, இப்ப செம அழகு..' பிரபல நடிகையின் த்ரோபேக் போட்டோவை அப்படி புகழும் ரசிகர்கள்!

By

சென்னை: பிரபல நடிகை வெளியிட்டுள்ள த்ரோபேக் போட்டோவை அப்படி புகழ்ந்து வருகின்றனர்.

தமிழில் எஸ்.ஜே.சூர்யாவின் அன்பே ஆருயிரே படத்தில் நிலா என்ற பெயரில் அறிமுகமானவர் மீரா சோப்ரா.

பிரஷாந்தின் ஜாம்பவான், சிபிராஜின் லீ, அர்ஜுனின் மருதமலை, கில்லாடி உட்பட பல படங்களில் நடித்தார்.

மீண்டும் நடிக்க

மீண்டும் நடிக்க

தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வந்த நிலா, இடையில் சில காலம் அதிக படங்களில் நடிக்காமல் இருந்தார். இப்போது மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார். வெப்சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் கொரோனா லாக்டவுனால் நடிகர், நடிகைகள் வீட்டை விட்டு வெளியில் வராமல் இருக்கின்றனர்.

எண்ணிக்கை

எண்ணிக்கை

கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிர முயற்சிகளை எடுத்து வருகின்றன.இந்தியாவிலும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. உயிரிழப்பவர்கள் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.

புகைப்படங்கள்

புகைப்படங்கள்

இந்நிலையில் நடிகர், நடிகைகள், வீட்டில் தாங்கள் செய்யும் யோகா, சமையல், ஒர்க் அவுட் போட்டோஸ் மற்றும் பழைய புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். நடிகை மீரா சோப்ராவும் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அடிக்கடி தனது புகைப்படங்கள், வீடியோ பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அவர் இப்போது த்ரோபேக் போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

மறக்க முடியாத

மறக்க முடியாத

15 வருடத்துக்கு முன் எடுத்த புகைப்படம் அது. இதை மீனாட்சி தத் என்ற மேக்கப் கலைஞர் நடிகை மீரா சோப்ராவுக்கு அனுப்பியுள்ளார். 'மறக்க முடியாத நினைவுகள். இப்போதுதான் கிடைத்தது, அதனால் அனுப்பி வைத்தேன்' என்று தெரிவித்திருக்கிறார் மீனாட்சி தத். இந்த போட்டோவுக்கு ரசிகர்கள் தாராளமாக லைக்ஸ்களை குவித்துள்ளனர். கமென்ட்களையும் பஞ்சமில்லாமல் பதிவிட்டுள்ளனர்.

இப்ப செம அழகு

இப்ப செம அழகு

பெரும்பாலான நெட்டிசன்கள், இந்தப் போட்டோவுல குழந்தை மாதிரி இருக்கறீங்க என்று கூறியுள்ளனர். உங்களுக்கு குழந்தையா மாறணுமா? என்று சிலரும் 'அப்பவே நீங்க அழகு.. இப்ப செம அழகு' என்று சிலரும் புகழ்ந்துள்ளனர் அவரை. இந்த போட்டோவுல் இருக்கிறதை விட இப்பதான் நீங்க செம ஹாட். 'மருதமலை' படத்தை மறக்க முடியுமா? என்று கேட்டிருக்கிறார் ஒரு தமிழ் ரசிகர்!

உங்க வயசு என்ன?

உங்க வயசு என்ன?

ஒரு மாற்றமும் இல்லை. அப்ப இருந்த மாதிரியேதான் இப்பவும் இருக்கீங்க' என்று கூறியுள்ளார் ஒருவர். இது 15 வருஷத்துக்கு முன்னால எடுத்த போட்டோன்னா, உங்க வயசு என்ன இப்ப? என்று ஆவலாகக் கேட்கிறார் ஒரு நெட்டிசன். இன்னொருவர், நம்ப முடியலை.. தமிழ்ல எதையாவது எழுதுங்களேன் என்று அப்பாவியாகக் கேட்டிருக்கிறார் ஒரு தமிழ் ஃபேன். ஒரு நெட்டிசன், நீங்க இப்பவும் 18 வயசு மாதிரிதான் இருக்கீங்க என்று சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X