மேக்கப் இல்லாமல் பால்கனியில் நின்று சிலிர்க்கவைக்கும் போஸ் கொடுத்த நடிகை நிலா!
மும்பை : எஸ் ஜே சூர்யாவின் அன்பே ஆருயிரே படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை மீரா சோப்ரா என்கிற நிலா.
இந்தி,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ள இவர் கடைசியாக தமிழில் வெளியான கில்லாடி படத்தில் நடித்ததோடு சரி அதன் பிறகு தொடர்ந்து இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
தமிழில் சில படங்களில் நடித்தபோதும் இவருக்கு ரசிகர் கூட்டம் இன்றும் இருந்து வரும் நிலையில் இப்பொழுது பால்கனியில் நின்றவாறு ஏக்கத்துடன் போஸ் கொடுத்திருக்கும் ஹாட் க்ளிக்ஸ் லைக்குகளை குவித்து வருகிறது.

பட்டிதொட்டியெங்கும் பரவியது
பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையில் வெளியான அன்பே ஆருயிரே திரைப்படத்தை நடிகர் எஸ் ஜே சூர்யா இயக்கி நடித்திருக்க இதில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை மீரா சோப்ரா. இந்தப்படம் மாபெரும் வெற்றி பெற்றதோடு இதில் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவான அனைத்து பாடல்களும் சக்கைப்போடு போட்டு பட்டிதொட்டியெங்கும் பரவியது.

பங்காரம்
முதல் படமே ஹிட் படமாக அமைய அதை தொடர்ந்து தெலுங்கில் அதிரடியாக என்ட்ரி கொடுத்த நடிகை மீரா சோப்ரா பவன் கல்யாண் நடிப்பில் பங்காரம் படத்தில் நடித்து பட்டையைக் கிளப்பினார். அந்த படத்தை இயக்குனர் தரணி இயக்கிய இருக்க இந்த படமும் மாபெரும் வெற்றி பெற்று வசூலை அள்ளி தெலுங்கு ரசிகர்களுக்கும் பரிச்சயம் ஆனார்.

குத்தாட்டம் போட்டு
அடுத்தடுத்து ஹிட் படங்களில் முன்னணி நடிகருடன் இணைந்து நடித்து வந்த மீரா விரைவில் முன்னணி நடிகையாக வருவார் என பலரும் எதிர்பார்த்திருந்தனர். அர்ஜுன் வடிவேலுவின் கலக்கல் காம்போவில் வெளியான மருதமலை இவருக்கு மற்றுமொரு வெற்றித் திரைப்படமாக அமைய அதன்பின் சிம்புவின் காளை படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு வந்து குத்தாட்டம் போட்டு சென்றார்.

ஒப்பந்தம் ஆகவில்லை
ஒரு கட்டத்தில் மார்க்கெட் இழந்த இவர் மீண்டும் பாலிவுட்டுக்கு திரும்பி அங்கு படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்த இருக்கு எஸ்ஜே சூர்யாவின் இயக்கத்தில் இசை படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது அதிலும் நடித்து கொடுத்தார். கடைசியாக பரத்தின் கில்லாடி படத்தில் நடித்தவர் அதன் பின் எந்த ஒரு தமிழ் படத்திலும் ஒப்பந்தம் ஆகவில்லை.

கிறங்கிப் போய்
இப்போது ஹிந்தியில் நாஸ்டிக் மற்றும் தெலுங்கில் முகலி பவ்வு என்ற இரண்டு திரைப்படங்களை கைவசம் வைத்து இருக்கும் மீரா சமூக வலைத்தளங்களில் சில கவர்ச்சி புகைப்படங்கள் தொடர்ந்து பதிவிட்டு ரசிகர்களை ஈர்த்து வர இப்பொழுது பால்கனியில் படுகவர்ச்சியான அரைகுறை உடையில் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டு போஸ் கொடுத்துள்ள இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் கிறங்கிப் போய் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











