பிரபல நடிகை வீட்டில் நடந்த சோகம்... கண்ணீரில் ரசிகர்கள்!
சென்னை: முன்னணி நடிகையான மீரா ஜாஸ்மீன் தந்தை உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 83. மீரா ஜாஸ்மின் தந்தையின் மறைவுக்கு தமிழ் மலையாள திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மீரா ஜாஸ்மின் தனது தந்தையுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்து உருக்கமாக கருத்தை பதிவிட்டுள்ளார்
ரன் படத்தின் மூலம் அறிமுகமான மீரா ஜாஸ்மின் தனது அழகான கண்களை உருட்டி உருட்டி ரசிகர்களை வசியம் செய்தார். முதல் படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, புதிய கீதை, ஆஞ்சநேயா, மற்றும் மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து, மெர்குரிப் பூக்கள், பரட்டை என்ற அழகுசுந்தரம் என அடுத்தடுத்து படங்களில் நடித்தார். விஷாலுக்கு ஜோடியாக சண்டைக்கோழி திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த படத்தில் அவர் க்யூட்டாகவும், அலப்பறை கொடுக்கும் பெண்ணாவும் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்த படத்தில் இடம் பெற்ற தாவணிப் போட்ட தீபாவளி பாடல் இன்று வரை ரசிகர்களுக்கு பிடித்தமான பாடலாகவே இருக்கிறது.

முன்னணி நடிகர்களுடன்: மேலும், தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களான விஜய், மாதவன், பரத் மற்றும் அஜித், ஆகியோருடன் நடித்த பெருமையும் இவருக்கு உண்டு, தமிழ் படங்கள் மட்டுமில்லாமல் மலையாளத்திலும் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் கணிசமான படங்களில் நடித்துள்ள இவர், ரவி தேஜாவுடன் நடித்தபத்ராபடம்வசூலைஅள்ளியது. இதனால், தெலுங்கிலும் அடுத்தடுத் தபடத்தில் கமிட்டானார்.
கணவரை பிரிந்தார்: நடிகை மீரா ஜாஸ்மீன் படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கும் போதே, 2014ம் ஆண்டு துபாயை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார். பின் 2016ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்தனர். திருமணத்திற்கு பின் எடை அதிகரித்து மிகவும் குண்டாக இருந்த மீரா ஜாஸ்மின், அப்போது விஜயகாந்துடன் இணைந்து மரியாதை படத்தில் நடித்தார். அந்த படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதையடுத்து சினிமாவில் தலைகாட்டாமல் இருந்தார்.
மீண்டும் சினிமாவில்: அதன்பிறகு பல உடல் பயிற்சி செய்து எடையை குறைத்த மீரா ஜாஸ்மின், நீண்ட ஆண்டுகளுக்கு பின் ஜெயராமுக்கு ஜோடியாக Makal என்ற மலையாளப்படத்தின் மூலம் பல ஆண்டுகளுக்குப்பின் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார். இந்த படத்தை அடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் தற்போது சினிமாவில்
தந்தை காலமானார்: இந்த நிலையில் மீரா ஜாஸ்மின் தந்தை ஜோசப் பிலிப் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். 83 வயதான அவர் எர்ணாகுளத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். மீரா ஜாஸ்மின் தந்தையின் மறைவுக்கு தமிழ் மலையாள திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் தந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள மீரா ஜாஸ்மின் மீண்டும் நாம் சந்திக்கும் வரை இந்த புகைப்படங்கள் நினைவில் இருக்கும் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











