தலை நிறைய மல்லிகைப்பூ.. நெற்றியில் குங்குமம்.. மீரா ஜாஸ்மினின் அசத்தல் போட்டோ!

சென்னை: மலையாள சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி பின் மாதவன் நடித்த ரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக களமிறங்கியவர் நடிகை மீரா ஜாஸ்மின். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ள இவருக்கு, 43 வயதான போதும்,அதே அழகுடன் இளமை குறையாமல் இருக்கும் போட்டோவை பார்த்து ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

முதல் படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, புதிய கீதை, ஆஞ்சநேயா, ஆயுத எழுத்து, மெர்குரிப் பூக்கள், பரட்டை என்ற அழகுசுந்தரம், ஜுட், என அடுத்தடுத்து படங்களில் நடித்தார். இவர் விஷாலுடன் இணைந்து சண்டைக்கோழி படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அவரின் க்யூட்டான ரியாக்ஷன், திமிரான பேச்சும் ரசிக்கும் படி இருக்கும். தமிழ் மட்டுமில்லாமல் மலையாளத்திலும் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், தெலுங்கில், ரவி தேஜாவுடன் பத்ரா படத்தில் நடித்தார். அந்த படம் வசூலை அள்ளியது. Paadam Onnu: Oru Vilapam என்ற மலையாள படத்திற்காக சிறந்த நாயகிக்கான தேசிய விருதை பெற்றார்.

நடிகை மீரா ஜாஸ்மின்: அடுத்தடுத்த படத்தில் பிஸியாக நடித்துக்கொண்டு இருந்த மீரா ஜாஸ்மி, 2014ம் ஆண்டு துபாயை சேர்ந்த இன்ஜினியரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார். இவரின் திருமண வாழ்க்கை இரண்டு ஆண்டுக்குள் முடிவுக்கு வந்து, 2016ம் ஆண்டு கணவரை விவாகரத்து செய்தார். திருமணத்திற்கு பின் உடல் எடை கூடி மிகவும் குண்டாக இருந்த மீரா ஜாஸ்மின், விஜயகாந்துக்கு ஜோடியாக மரியாதை படத்தில் நடித்தார். அந்த படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை.

Meera jasmine instagram
Photo Credit:

ரீ என்ட்ரி: உடல் எடை அதிகரித்து இருந்த மீரா, கடுமையாக உடற்பயிற்சி செய்து எடையை குறைத்து அழகாக மாறிய இவர், ஜெயராமுக்கு ஜோடியாக Makal என்ற மலையாளப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார். அந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படத்து வருகிறார். அண்மையில் இவர் நயன்தாரா, மாதவன், சித்தார்த் நடித்த டெஸ்ட் திரைப்படத்தில் சித்தார்த்தின் மனைவியாக நடித்திருந்தார். கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட இந்த படம் நல்ல விமர்சனத்தை பெற்றது. ரன் திரைப்படத்திற்கு பிறகு நடிகை மீரா ஜாஸ்மின் பல ஆண்டுகளுக்கு பின் மாதவனுடன் டெஸ்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

அழகான போட்டோ: இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மீரா ஜாஸ்மின், நீல நிற உடையில் தலை நிறைய மல்லிப்பூ நெற்றியில் குங்குமத்துடன் அழகாக போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோவைப்பார்த்த நடிகை மீரா ஜாஸ்மினின் ரசிகர்கள், 43 வயதிலும் குறையாத அதே அழகு என அவர் வர்ணித்து கவிதை பாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X