சாய் பாபா முகத்தில் கஞ்சாவை இழுத்து புகை விடும் சர்ச்சை நடிகை.. பரபரப்பை கிளப்பும் பகீர் வீடியோ!
சென்னை: போன வாரம் சாதி குறித்த பேசி சர்ச்சையை கிளப்பிய நடிகை மீரா மிதுன் இந்த வாரம் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் நடிகை மீரா மிதுன். அழகிப் போட்டி, பிக்பாஸ், திரை படங்கள் என மீரா மிதுன் கால் வைத்த அனைத்து இடங்களிலும் பிரச்சனைதான்.
தமிழ் சினிமா, தமிழக அரசியல் மற்றும் தமிழ் சினிமா பிரபலங்கள் என பலரையும் வாய்க்கு வந்தப்படி தரக்குறைவாக பேசி வந்தார் மீரா மிதுன். இந்நிலையில் கடந்த வாரம் பட்டியலின மக்கள் குறித்து அருவருக்கத் தக்க வகையில் பேசியிருந்தார் மீரா மிதுன்.

சினிமா துறையில் இருந்து வெளியேற்ற வேண்டும்
தமிழ் சினிமாவில் உள்ள பட்டியல் இனத்தை சேர்ந்த இயக்குநர்கள் மற்றும் நடிகர் நடிகைகளை வெளியேற்ற வேண்டும் என்றும் கூறியிருந்தார் நடிகை மீரா மிதுன். நடிகை மீரா மிதுனின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது.

7 பிரிவுகளில் வழக்கு - சம்மன்
அவரை கைது செய்யக்கோரி சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. மீரா மிதுன் மீது சென்னை சைபர் க்ரைம் போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நேரில் ஆஜராக அவருக்கு சம்மனும் அனுப்பியுள்ளனர்.

தமிழ் சினிமா விபச்சார கூடமாக உள்ளது
ஆனாலும் அடங்காத மீரா மிதுன் தனக்கு அனுப்பப்பட்ட சம்மன் தொடர்பாக பேசி வீடியோ வெளியிட்டார் மீரா. அதில் பிரதமர் மோடிக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் தன்னுடைய பிரச்சனை குறித்து விளக்கம் அளித்தார் மீரா மிதுன். அந்த வீடியோவில் மோடிக்கு பேசிய வீடியோவில் தமிழ் சினிமா இன்டஸ்ட்ரி விபச்சார கூடமாக மாறி வருவதாக கூறினார்.

என்னை கைது செய்ய முடியாது
இதேபோல் முதல்வர் ஸ்டாலினுக்கு பேசிய வீடியோவில் எல்லா ஆண்களும் தன் மீது ஆசைப்படுவதால் தான் தனக்கு பிரச்சனை என்றார். மேலும் காந்தி நேரு எல்லாம் ஜெயிலுக்கு போன போது நான் ஜெயிலுக்கு போனால் என்ன என்று கேட்டார். அதோடு தன்னை கைது செய்வது என்பது கனவில்தான் நடக்கும் என்றும் கூறினார் நடிகை மீரா மிதுன்.

நண்பருடன் சேர்ந்து கஞ்சா இழுத்து
அவரது இந்த பேச்சு ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள் மீரா மிதுனின் மற்றொரு வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு கையில் கஞ்சா பாட்டீலை பற்ற வைத்து இழுத்து இழுத்து புகை விடுகிறார் மீரா மிதுன்.
பக்கத்தில் சாய் பாபா போட்டோவையும் வைத்துக்கொண்டு ஆண் நண்பருடன் சேர்ந்து கஞ்சா இழுத்து லூட்டி அடித்துள்ளார் மீரா மிதுன்.

போன வாரம் சாதி.. இந்த வாரம் மதம்
மீரா மிதுனின் இந்த வீடியோவை, தொழிலதிபரான ஜோ மைக்கேல் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். மேலும் போன வாரம் சாதி குறித்து பேசிய சர்ச்சையை ஏற்படுத்திய மீரா மிதுன் இந்த வாரம் மதத்தை இழிவு படுத்தியுள்ளார். இந்த வீடியோவை தனது பக்கத்தில் இருந்து மீரா மிதுன் டெலிட் செய்துள்ளார் என குறிப்பிட்டுள்ள ஜோ மைக்கேல் முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடி, உட்பட பலரின் டிவிட்டர் ஹேண்டிலையும் டேக் செய்துள்ளார்.
Recommended Video

விரைவில் கர்மா ஆட்டத்தை காட்டும்
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் சாய் பாபா முன்பு இதை செய்ய மீரா மிதுனுக்கு என்ன துணிச்சல்? போலீஸார் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கூறி வருகின்றனர். இன்னும் சிலர் கர்மா விரைவில் அதன் ஆட்டத்தை அவரிடம் தொடங்கும் என்றும் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











