பேட்ட: த்ரிஷா ரோலில் நான் தான் நடிச்சிருக்கனும்... பரபரப்பை கிளப்பும் நடிகை!

தனது நடிப்பு அனுபவம் குறித்து நடிகை மீரா மிதுன் பேட்டி அளித்துள்ளார்.

சென்னை : பேட்ட படத்தில் த்ரிஷா நடித்துள்ள ரோலில் தான் தான் நடிக்க தேர்வானேன் என நடிகை மீரா மிதுன் தெரிவித்துள்ளார்.

சூர்யா விக்னேஷ் சிவன் கூட்டணியில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக நடித்தவர் மீரா மிதுன். அதற்கு முன்பே 8 தோட்டாக்கள் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார்.

சினிமாவிற்கு தான் இவர் புதிது.. ஆனால் மாடல் உலகில் கிட்டத்தட்ட இவர் ஒரு நயன்தாரா என்றே சொல்லலாம். ஆம்.. சர்வதேச அளவில் மோஸ்ட் வான்டட் தென்னிந்திய மாடல் முதல் சாய்ஸாக இருப்பது மீரா மிதுன் தான்.

மிஸ் சௌத் இந்தியா அழகி பட்டத்தை வென்ற இவர் சென்னையைச் சேர்ந்த அக்மார்க் தமிழ் பொண்ணு. படிப்பு, நடனம் என்று மட்டுமே இருந்த இவரை அவரது உயரமும் நிறமும் ஒரு மாடல் அழகியாகவே பலருக்கும் தோன்றச் செய்தது..

அதன்பின் 8 தோட்டாக்கள் மற்றும் தானா சேர்ந்த கூட்டம் படங்களில் நடித்தார். தற்போது நல்ல படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். 2019ல் வெளியாக உள்ள இவரது படங்கள் திரையுலகிலும் தன்மீது மிகப்பெரிய வெளிச்சத்தைப் பாய்ச்சும் என திடமாக நம்புகிறார் மீரா மிதுன்.

நடித்தால் ஹீரோயின் தான்

நடித்தால் ஹீரோயின் தான்

இதுகுறித்து அவர் கூறும்போது, "ஒரு பெண் நடிக்க வந்துவிட்டாலே அவள் கதாநாயகிதான். எனவே குணச்சித்திர வேடம் பற்றிய பேச்சுக்கே இடமில்லை.

முக்கிய கேரக்டர்

முக்கிய கேரக்டர்

கதையின் மையக்கருவாக அல்லது கதையின் திருப்பத்திற்கு வழிவகுக்கும் முக்கிய கேரக்டர் என எதுவாக இருந்தாலும் அதில் நான் சிறப்பாக நடிப்பேன்.

த்ரிஷா ரோலில் நான்

த்ரிஷா ரோலில் நான்

சூப்பர்ஸ்டார் ரஜினியின் ‘பேட்ட' படத்தில் நடிப்பதற்காக ஆடிஷனுக்கு அழைக்கப்பட்டேன். லுக் டெஸ்ட், ஸ்கிரீன் டெஸ்ட் வரை சென்றேன். ஆனால் ஏதோ சில காரணங்களால் அந்த வாய்ப்பு கைகூடாமல் போய்விட்டது. எனக்கு பதில் அந்த கதாபாத்திரத்தில் த்ரிஷா நடித்திருக்கிறார் என்பது சமீபத்தில் தான் தெரியவந்தது.

கடாரம் கொண்டான்

கடாரம் கொண்டான்

அதேபோல் கமல் தயாரிப்பில் ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘கடாரம் கொண்டான்' படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தேன். சில காரணங்களால் கடைசி நேரத்தில் அந்த வாய்ப்பும் விலகிப்போய்விட்டது. விலகிப்போன வாய்ப்புகள் மீண்டும் வேறு வடிவத்தில், வேறு படங்களில் என்னை தேடிவரும்" என திடமாக நம்புகிறார் மீரா மிதுன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X