ஊழல் இல்லாத தமிழகத்தை உருவாக்குவேன்.. 2021ல் நான் முதல்வராவது உறுதி.. மீரா மிதுன் வேற லெவல்!
சென்னை: ஜெயலலிதாவுக்கு பிறகு முதல்வராகும் தகுதி உள்ள நடிகை என தன்னைத் தானே புகழ்ந்து போட்டோ வெளியிட்டிருக்கும் நடிகை மீரா மிதுனை நெட்டிசன்கள் மரண பங்கம் செய்திருக்கின்றனர்.
Recommended Video
மாடலான மீரா மிதுன் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஃபெமினாஸ் மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை பெற்றார். இதன் மூலம் ஓரளவுக்கு பிரபலமானார்.
ஆனால் அதில் தனது வயதை தவறாக குறிப்பிட்டும் தனக்கு திருமணம் ஆனதை மறைத்தும் பங்கேற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதோடு அழகிப்போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களிடம் பண மோசடியிலும் ஈடுபட்டார்.

கொலை முயற்சி
இது தொடர்பாக அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழவே அழகிப்பட்டத்தை திரும்பப் பெற்றது ஃபெமினாஸ் அமைப்பு. இதனால் மேலும் பிரபலமானார் மீரா மிதுன். தொடர்ந்து தொழிலதிபர் ஜோ மைக்கேல் மீதான கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் சிக்கினார்.

செல்போன் நிறுவனம்
தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் மேலும் பிரபலமானார். அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி வரும் மீரா மிதுன், மத்திய அரசு, மாநில அரசுகளை விளாசுவது, தமிழ் சினிமாவை விளாசுவது என இருந்து வருகிறார். செல்போன் நிறுவனங்களை கூட விட்டு வைப்பதில்லை மீரா மிதுன். பிரதமர் மோடி வரை அனைவரையும் சாடி வருகிறார்.
ஜெயலலிதாவுக்கு பிறகு
இந்நிலையில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றில் தன்னை பற்றி புகழ்ந்து போடப்பட்டுள்ள வீடியோ நியூஸ் ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார். மேலும் தனது போட்டோவில், ஜெஜெ அம்மாவிற்கு பிறகு தமிழக முதல்வராகும் அனைத்து தகுதிகளும் உடையவர். தைரியத்திற்கும், புகழுக்கும் பெயர் போன நடிகை மீரா மிதுன்.. என பதிவிடப்பட்டுள்ளது.

முதல்வர் ஆவேன்
அதோடு நான் ஊழலுக்கு எதிரானவள், என்னால் ஊழல் இல்லாத தமிழகத்தை உருவாக்க முடியும், 2021ல் நிச்சயமாக நான் முதல்வர் ஆவேன் என்றும் அந்த போட்டோவுக்கு நடிகை மீரா மிதுன் கேப்ஷன் கொடுத்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் செம காண்டாகி இருக்கின்றனர்.

உடல் கூசவில்லையா?
மன நோயின் உச்சம் இது என கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன். மற்றொரு நெட்டிசனான இவர், நீங்களும் புரட்சி தலைவி அவர்களும் ஒன்றா? இதை எழுத உங்களுக்கு உடல் கூசவில்லையா??? அம்மா மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த மறுக்க மறைக்க முடியாத சகாப்தம்... இந்த பதிவை அனைவரும் புகார் செய்யவும்...ப்ளீஸ் எல்லா நண்பர்களும் இதைப் பற்றி ரிப்போர்ட் செய்யுங்கள் என கூறியுள்ளார்.

கொசு தொல்லை
மற்றொரு நெட்டிசன் டிஸ்லைக் ஆப்ஷன் உள்ளதா என கேட்டுள்ளார். மீரா மிதுனின் இந்த பதிவை பார்த்து பலரும் டென்ஷன் ஆனதை பார்த்த இந்த நெட்டிசன், கைஸ்.. ப்ளீஸ் சில்.. இன்று இன்றைக்கான காமெடி என நக்கலடித்துள்ளார். மற்றொரு நெட்டிசன் இந்த கொசு தொல்லை தாங்க முடியல என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











