twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வாய் தவறி அவதூறாக பேசி விட்டேன்.. தயவு செய்து ஜாமீன் கொடுங்கள்.. மீரா மிதுன் அந்தர் பல்டி!

    |

    சென்னை: பட்டியலின மக்கள் குறித்து வாய் தவறி அவதூறாக பேசி விட்டதாக நடிகை மீரா மிதுன் தெரிவித்துள்ளார்.

    நடிகை மீரா மிதுன் தமிழில் 8 தோட்டாக்கள் மற்றும் தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார். இவர் சினிமா மூலம் பிரபலமானதை விட சர்ச்சைக்குரிய வகையில் பேசி பிரபலமானதுதான் அதிகம்.

    கன்னடத்தில் அறிமுகமாகும் நடிகை சாய் பல்லவி.. ஹீரோ யார் தெரியுமா! கன்னடத்தில் அறிமுகமாகும் நடிகை சாய் பல்லவி.. ஹீரோ யார் தெரியுமா!

    அந்தளவுக்கு தமிழ் சினிமா மற்றும் தமிழ் சினிமாக்காரர்கள் மற்றும் அரசியல்வாதிகள் குறித்து அவதூறாக பேசியுள்ளார் மீரா மிதுன். நடிகர்கள் கமல்ஹாசன், விஜய், சூர்யா, தனுஷ் என பலர் குறித்தும் தரக்குறைவாக பேசினார்.

    பல சர்ச்சைகளில் சிக்கிய மீரா மிதுன்

    பல சர்ச்சைகளில் சிக்கிய மீரா மிதுன்

    இதனால் சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் வாங்கிக்கட்டினார். அழகிப் போட்டி, திருமணம், பிக்பாஸ் என பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார் மீரா மிதுன். ஏற்கனவே நடிகை மீரா மிதுன் மீது பல்வேறு காவல்நிலையங்களில் மோசடி, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    பட்டியலின மக்கள் குறித்து அவதூறு பேச்சு

    பட்டியலின மக்கள் குறித்து அவதூறு பேச்சு

    இந்நிலையில் நடிகை மீரா மிதுன் பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசி அண்மையில் வீடியோ வெளிட்டிருந்தார். அந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து அவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மீரா மிதுன் மீது 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பினர்.

    கைது செய்வது கனவில் தான் நடக்கும்

    கைது செய்வது கனவில் தான் நடக்கும்

    ஆனால் தன்னை கைது செய்வது கனவில்தான் நடக்கும் என வீடியோ வெளியிட்ட மீரா மிதுன் ஆஜராகமல் தலைமறைவானார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை கேரள மாநிலம் ஆலப்புழாவில் சொகுசு விடுதியில் தங்கியிருந்த மீரா மிதுனை தமிழக போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

    கையை உடைக்க முயற்சி - மீரா மிதுன் புகார்

    கையை உடைக்க முயற்சி - மீரா மிதுன் புகார்

    கைது செய்ய சென்ற போதே போலீசாரிடம் அவ்வளவு வாக்குவாதம் செய்தார் மீரா மிதுன். பெரும் ஆர்ப்பாட்டத்துக்கு பின்னரே அவரை போலீசார் கைது செய்து சென்னை கொண்டு வந்தனர். சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்ட மீரா மிதுன், சாப்பாடு கொடுக்கவில்லை, கையை உடைக்க முயற்சி செய்தார்கள் என கத்தி கூச்சலிட்டார்.

    மாற்றி மாற்றி பேசும் மீரா மிதுன்

    மாற்றி மாற்றி பேசும் மீரா மிதுன்

    பின்னர் சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை வரும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.

    இதனை தொடர்ந்து நடிகை மீரா மிதுன் காவல்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைக்காமல், மாற்றி மாற்றி பேசி வருவதாக தகவல் வெளியானது.

    மீரா மிதுனின் யூட்யூப் சேனலை முடக்க

    மீரா மிதுனின் யூட்யூப் சேனலை முடக்க

    இதனால் மன நல ஆலோசகர் முன்னிலையில் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற சைபர் கிரைம் போலீசார் முடிவு செய்தனர். மேலும் சர்ச்சை வீடியோக்கள் ஷேர் செய்யப்படும் மீரா மிதுனின் யூட்யூப் சேனலை முடக்கவும் போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Recommended Video

    Meera Mithun Arrested In Kerala And Brought To Chennai | Tamil Filmibeat
    வாய் தவறி பேசிவிட்டேன் - மீரா மிதுன்

    வாய் தவறி பேசிவிட்டேன் - மீரா மிதுன்

    இந்நிலையில், மீரா மிதுன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருக்கிறார். அதில், பல படங்களில் நடிப்பதற்கு கால்ஷீட் கொடுத்துள்ள நிலையில் தன்னை சிறையில் அடைத்துள்ளதால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தன்னை பற்றி அவதூறு செய்தி பரப்பியதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பேசிய போது வாய் தவறி பட்டியலின சமூகத்தினர் பற்றி அவதூறாக பேசிவிட்டேன் என மனுவில் கூறியுள்ளார் மீரா மிதுன்.

    கைதுக்கு பிரபலங்கள் ஆதரவு - ஆபாச போட்டோக்கள்

    கைதுக்கு பிரபலங்கள் ஆதரவு - ஆபாச போட்டோக்கள்

    மீரா மிதுன் கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு பிரபலங்களும் ஆதரவு தெரிவித்திருந்தனர். அவர் கைது செய்யப்பட வேண்டிய ஒருவர் தான் என்றும் கூறியிருந்தனர். இதனால் தொடர்ந்து மீரா மிதுன் ட்ரென்டிங்கில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள மீரா மிதுன் தொடர்ந்து ஆபாசமான போட்டோக்களையும் வெளியிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Actress Meera mithun says unknowingly talk about the particular caste. Meera mithun says in her bail seeking petition.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X