மீரா மிதுன் திருமணம் செய்ய போகும் நபர் இவர்தானா? படுநெருக்கமாக கப்பிள் சேலஞ்ச்! #couplechallenge

சென்னை: நடிகை மீரா மிதுன் இளைஞருடன் ஷேர் செய்திருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் இவர்தான் நீங்கள் திருமணம் செய்து கொள்ள போகும் நபரா என கேட்டு வருகின்றனர்.

நடிகை மீரா மிதுன் ஏராளமான சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். நடிகர்கள் விஜய், சூர்யா, கமல் என பலரையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இதனால் அவர்களின் ரசிகர்களுக்கும் மீரா மிதுனுக்கும் சமூக வலைதளங்களில் கடுமையான வார்த்தை போர் நிலவி வருகிறது. இதனிடையே மீரா மிதுன் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இளைஞர் ஒருவருடன்

இளைஞர் ஒருவருடன்

இதன் காரணமாக அவர் எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இதனிடையே தனது டிவிட்டர் பக்கத்தில் #couplechallenge என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டு இளைஞர் ஒருவருடன் முகத்துடன் முகம் வைத்து முத்தம் கொடுப்பது போன்ற போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

இவர்தான் அவரா?

இவர்தான் அவரா?

அதனை பார்த்த நெட்டிசன்கள் இவர் தான் நீங்கள் திருமணம் செய்து கொள்ள போகும் நபரா என கேட்டுள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக அறிவித்தார் மீரா மிதுன். மேலும் தான் திருமணம் செய்து கொள்ள போகும் நபரின் தகவல் எதையும் சொல்லப்போவதில்லை என்றார்.

சவாலை ஏற்ற மீரா மிதுன்

சவாலை ஏற்ற மீரா மிதுன்

அது ரகசியமாகவே இருக்கட்டும் என்ற மீரா மிதுன் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் திருமணம் நடைபெறும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் கப்பிள் சேலஞ்சை ஏற்றுக் கொண்டேன் எனக் கூறி அந்த போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.

விளாசல்

விளாசல்

அதனை பார்த்த சில நெட்டிசன்கள் நடிகர் வடிவேலு முத்தம் கொடுப்பது போன்று உதட்டைக் குவித்து வைத்துள்ள போட்டோவை பகிர்ந்து பங்கம் செய்துள்ளனர். இன்னும் சில நெட்டிசன்கள் படுமோசமாக சொல்ல முடியாத அளவுக்கு விளாசியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X