பிரபலங்களுடன் வளைச்சு வளைச்சு போட்டோ எடுக்கும் நடிகை.. ஆனாலும் வச்சு செய்யுறாங்க.. வாய்ப்பும் இல்ல!
சென்னை: எப்போதும் கவர்ச்சி போட்டோக்களை ஷேர் செய்யும் மீரா மிதுன் தற்போது பிரபலங்களுடன் எடுத்த போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.
Recommended Video
ஊரடங்கு நேரத்திலும் கவர்ச்சி ததும்ப ததும்ப போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார் நடிகை மீரா மிதுன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் மீரா.
ஆனால் இருந்த வாய்ப்புகளும் பறிபோனது. இதனால் எப்படியாவது பட வாய்ப்பை பெற்று விட வேண்டும் என்ற நோக்கத்தில் தர லெவலில் இறங்கி கிளாமர் காட்டி வருகிறார்.

பிரபலங்களுடன் போட்டோ
இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அதனை பார்த்து நெட்டிசன்கள் படு கேவலமாக திட்டியும் அடங்குவதாய் இல்லை மீரா மிதுன். இந்நிலையில் நடிகை மீரா மிதுன் பிரபலங்கள் பலருடன் சேர்ந்து எடுத்த போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அனிருத்துடன்
அந்த வகையில் நேற்று முன்தினம் இசையமைப்பாளர் அனிருத்துடன் எடுத்த போட்டோவை வெளியிட்டார். மிகவும் மோசமான உடையில் அவருடன் ஒட்டி உரசி போட்டோ எடுத்திருந்தார் மீரா மிதுன். அதனை பார்த்த நெட்டிசன்கள் அனிருத்தை கவனமாக இருக்கும்படி எச்சரித்தனர்.

கடைசி பார்ட்டி
இதனை தொடர்ந்து அனிருத் மற்றும் யுவன் ஷங்கர் ராஜாவுடன் சேர்ந்து எடுத்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். அதனை பார்த்தும் துப்பாத குறையாக திட்டி தீர்த்தனர் நெட்டிசன்கள். சில நெட்டிசன்கள் கடைசியாக மீரா மிதுன் இன்வைட் செய்யப்பட்ட பார்ட்டி இதுதான் என்று கூறி கலாய்த்தனர்.

தோளில் கையை போட்டு
தொடர்ந்து அந்த பார்ட்டியில் இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் சேர்ந்து எடுத்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். வெங்கட் பிரபு தோள் மேல் கையை போட்டு செம ஜாலியாக போஸ் கொடுத்திருந்தார் மீரா மிதுன். அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்ஸ் போய் எல்லோருடனும் போட்டோ எடுக்குறது ஒரு சுகம்தான் என்று மரண பங்கம் செய்தனர்.

கிண்டல் செய்யும் நெட்டிசன்ஸ்
இதனைதொடர்ந்து நடிகர் சிம்புவுடன் எடுத்த போட்டோவையும் ஷேர் செய்திருந்தார். சிம்புடவுனும் ஒட்டி உரசி போஸ் கொடுத்திருந்தார். அந்த போட்டோவையும் பார்த்து படு மோசமாக கிண்டல் செய்து வருகின்றனர். மீரா மிதுனின் இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











