என் பேர வச்சு சம்பாதிச்ச காசல்லாம் கொடுங்க.. டிக்டாக்குடன் மல்லுக்கட்டும் பிக்பாஸ் பிரபலம்!

சென்னை: தன்னுடைய பெயரை வைத்து சம்பாதித்த பணத்தை கொடுங்கள் என டிக்டாக் நிறுவனத்துடன் மல்லுக்கட்டி வருகிறார்.

நடிகை மீரா மிதுன் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சிறு வேடத்தில் நடித்தார். மாடலான இவர் பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போனவர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற மீரா மிதுன் இயக்குநர் சேரன் மீது அபாண்ட குற்றச்சாட்டை கூறினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

முதல்வர் ஆசை

முதல்வர் ஆசை

தமிழக அரசை தொடர்ந்து விமர்சித்து வரும் மீரா மிதுன், அமைச்சர்களையும் சாடி வருகிறார். இந்த அரசை களைத்து விட்டு தன்னை முதல்வராக்குங்கள் என பிரதமர் மோடிக்கும் டிவிட்டி வருகிறார். தான் முதல்வர் ஆனால் தமிழ் நாடே வேற மாதிரி ஆகிவிடும் என டயலாக் பேசி வருகிறார்.

என்ன பிரச்சனை என்றாலும்

என்ன பிரச்சனை என்றாலும்

அதோடு என்ன பிரச்சனை என்றாலும் பிரதமர் மோடியின் டிவிட்டர் ஹேண்டிலை குறிப்பிட்டு டேக் செய்கிறார். பார்ன் சைட்டில் அவர் போட்டோ இருந்தாலும் சரி, வோடாஃபோன் சிக்னல் கிடைக்காவிட்டாலும் சரி, போலீஸ் மீது குறை என்றாலும் சரி பிரதமர் மோடிக்குதான் டிவிட் செய்வார் மீரா மிதுன்.

டிக்டாக் நிறுவனம்

டிக்டாக் நிறுவனம்

இந்நிலையில் கடந்த சில நாட்களாக இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், டிக்டாக் என அனைத்து சோஷியல் மீடியாக்களையும் சாடி வருகிறார் நடிகை மீரா மிதுன். டிக்டாக்கில் தனக்கு கணக்கே இல்லாத நிலையில் தன்னுடைய பெயரை வைத்து அந்நிறுவனம் சம்பாதித்ததாக குற்றம்சாட்டி வருகிறார்.

நோட்டீஸ் அனுப்புவேன்

நோட்டீஸ் அனுப்புவேன்

இந்நிலையில் இன்று அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், டிக்டாக் நிறுவனத்தை கடுமையாக சாடியுள்ளார். அதாவது, #TiktokbannedinIndia நீங்கள் மன்னிப்பு மின்னஞ்சல் மற்றும் இந்தியாவுக்கு தகுதியான பணத்தை எனக்கு அனுப்பினால் நல்லது, நீங்கள் என் பெயரில் சம்பாதித்தீர்கள் இல்லையெனில் நான் லீகல் நோட்டீஸ் அனுப்புவேன் என பதிவிட்டுள்ளார்.

திருந்தவே மாட்டியா

திருந்தவே மாட்டியா

அவரது இந்த பதிவை பார்த்து துப்பாத குறையாக திட்டி தீர்த்திருக்கிறார்கள் நெட்டிசன்கள். மீரா மிதுனின் இந்த பதிவை பார்த்த இந்த நெட்டிசன், நீயெல்லாம் திருந்தவே மாட்டியா.. எப்படியாவது ஃபேமஸ் ஆயிடலாமுன்னு பாக்குற.. ஒருத்தரும் கண்டுக்கமாட்றாங்களா.. நீ இப்படியே புலம்பிட்டு இருக்க வேண்டியது தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X