அனிருத்துடன் செல்பி எடுத்த பிக்பாஸ் பிரபலம்.. பச்சையாக கேட்ட நெட்டிசன்ஸ்.. தீயாய் பரவும் போட்டோஸ்!

சென்னை: அனிருத்துடன் சேர்ந்து செல்பி எடுத்த பிக்பாஸ் பிரபலத்தை நெட்டிசன்கள் வச்சு செய்திருக்கின்றனர்.

Recommended Video

Meera Mithun shares pakka Glamour photo | Future CM

நடிகை மீரா மிதுன், மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர். சூர்யாவின் நடிப்பில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்தார்.

கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார் மீரா மிதுன். இதில் சேரன் மீது பொய்யான குற்றச்சாட்டை கூறியதோடு ஹவுஸ்மேட்ஸ்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

கவர்ச்சி போட்டோஸ்

கவர்ச்சி போட்டோஸ்

இதனால் மக்களின் கோபத்திற்கு ஆளானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட மீரா மிதுன் தொடர்ந்து பலரையும் விளாசி வீடியோ வெளியிட்டு வந்தார். தொடர்ந்து தனது கவர்ச்சியான போட்டோக்களையும் ஷேர் செய்து வந்தார் மீரா மிதுன்.

பிரபலங்களுடன் செல்பி

பிரபலங்களுடன் செல்பி

பின்னர் பிரபலங்கள் பலருடன் சேர்ந்து செல்பி எடுப்பதை வாடிக்கையாக கொண்டார். அமைச்சர் விஜயபாஸ்கர், சீமான், சிம்ரன், சரவணன், சாண்டி என பலருடன் செல்பி எடுத்து அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வந்தார். ஏன் அபாண்ட குற்றச்சாட்டை கூறிய சேரனுடன் சேர்ந்தே செல்பி எடுத்திருக்கிறார் மிரா மிதுன்.

ஒட்டி உரசியப்படி செல்பி

ஒட்டி உரசியப்படி செல்பி

இந்நிலையில் தற்போது இசையமைப்பாளர் அனிருத்துடன் சேர்ந்து செல்பி போட்டோ ஒன்றை எடுத்துள்ளார். அதில் கோட் சூட்டுடன் உள்ள அனிருத்துடன் ஒட்டி உரசி போட்டோ எடுத்துள்ளார் மீரா மிதுன். இந்த போட்டோவை தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 கம்ப்ளைன்ட் எச்சரிக்கை

கம்ப்ளைன்ட் எச்சரிக்கை

இதனை பார்த்த நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். மீரா ஷேர் செய்திருக்கும் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், பார்த்து நில்லுங்க இல்லன்னா கைய புடிச்சிட்டான், இடுப்ப புடிச்சிட்டான்னு கம்ப்ளைன்ட் வரப்போகுது என கூறி அனிருத்தை எச்சரித்திருக்கிறார்.

ஒரே மாதிரி இருக்கிங்க

ஒரே மாதிரி இருக்கிங்க

மற்றொரு நெட்டிசனான இவர் அவரு எவ்ளோ நல்ல மனுஷன் அவரு பேர கெடுத்துராத போம்மா.. என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன். இந்த நெட்டிசன் என்ன ரெண்டு பேரும் ஒரே மாதிரி இருக்கிங்க.. என்று கேட்டு கிண்டலடித்துள்ளார் இந்த நெட்டிசன்.

மரண பீதி தெரியுதே

மரண பீதி தெரியுதே

என்னடா டபுள் ஆக்ஷன் என்று கேட்டு மீராவை மரண பங்கம் செய்துள்ளார் இந்த நெட்டிசன். அனிருத் கண்ணுலேயே ஒரு மரண பீதி தெரியுதே என்று கலாய்த்திருக்கிறார் இந்த நெட்டிசன். மீரா மிதுன் அனிருத் செல்பி போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X