நாகினி போல வித்தியாசமான கெட்டப்பில் மேகா ஆகாஷ் வெளியிட்ட புகைப்படம்!
சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மேகா ஆகாஷ்.
மேகா ஆகாஷ். கடைசியாக கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் நடித்து வரும் இவர் இப்பொழுது நாகினி போல வித்தியாசமான கெட்டப்பில் உள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

கல்லூரி மாணவியாக
தமிழ் சினிமாவில் அதிக அளவு ரசிகர்களால் ரசிக்கப்படும் க்யூட் நடிகைகளின் வரிசைகளில் மேகா ஆகாஷும் ஒருவர். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் முதல்முறையாக அறிமுகமானார் . பேட்ட படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து அனைவரையும் கவர்ந்த மேகா ஆகாஷ் அதைத் தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாக என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்தார்.

என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில்
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் மிக நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டு ஒருவழியாக திரையரங்குகளில் வெளியானது. ஆனால் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல படங்களில் நடித்து அங்கும் பிரபலமான நடிகையாக உள்ளார் மேகா ஆகாஷ்.

முதல்முறையாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாக
சல்மான்கான் பிரபுதேவா கூட்டணியில் உருவான ராதே படத்தில் நடித்து இந்தி பட உலகிலும் கால் தடத்தை பதித்துள்ளார். விஜய்சேதுபதி நடித்து வரும் யாதும் ஊரே யாவரும் கேளிர் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. முதல்முறையாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இந்த படத்தில் நடித்துள்ளார் மேகா ஆகாஷ்.

பெரிதாக கவர்ச்சி காட்டாமல்
தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒருசேர உருவாகிவருகிறது அக்டோபர் 31 லேடிஸ் நைட். முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்திய திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தில் மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். இதுவரை நடித்த எந்த ஒரு படத்திலும் பெரிதாக கவர்ச்சி காட்டாமல் க்யூட் நடிப்பின் மூலம் தொடர்ந்து ரசிகர்களை வசியம் செய்து வரும் இவர் விரைவிலேயே தென்னிந்திய அளவில் பிரபலமான முன்னணி நடிகையாக வலம் வர உள்ளார்.

நாகினி போல நெத்திச் சுட்டி
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மேகா ஆகாஷ் இப்பொழுது நாகினி போல வித்தியாசமான கெட்டப்பில் உள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் சிகப்பு நிற சேலையில் லூஸ் ஹேர் விட்டு கொண்டு நாகினி போல நெத்திச் சுட்டியும் அணிந்து இருக்க பார்க்கும் அனைவரும் நாகினி ஹீரோயின் போலவே நீங்கள் இருக்கின்றீர்கள் என கூறிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











