சத்தமே இல்லாமல் நிச்சயத்தை முடித்த மேகா ஆகாஷ்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?
சென்னை: சூப்பர் ஸ்டார் நடித்த பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மேகா ஆகாஷ். தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடித்து வரும் இவர், சத்தமே இல்லாமல் தனது நீண்ட நாள் காதலர் சாய் விஷ்ணுவை திருமணம் செய்ய உள்ளார். இவர்களின் திருமண நிச்சயதார்த்தப் போட்டோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு தெரிந்த முகமாக மாறியவர் தான் நடிகை மேகா ஆகாஷ். இந்த படத்தைத் தொடர்ந்து சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். ஆனால், அந்த படம் சுமாராகக்கூட ஓடவில்லை. இதனால், என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தை பெரிதும் எதிர்பார்த்து இருந்தார். இந்த படத்தில் இடம் பெற்ற மறுவார்த்தை பேசாதே, மடிமீது நீ தூங்கு பாடல் மிகப்பெரிய அளவில் டிரெண்டானது.பாடல் ஹிட்டான அளவிற்கு படம் ஹிட்டாகவில்லை.

நடிகை மேகா ஆகாஷ்: அதன் பின், படவாய்ப்பே இல்லாமல் இருந்த இவர் அசோக் செல்வனுடன் சேர்ந்து சபாநாயகன் படத்தில் நடித்தார். பின் சந்தானம் நடிப்பில் கடந்த பிப்ரவரியில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் நடித்திருந்தார். அதன் பின் விஜய் ஆண்டனி நடிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவான மழை பிடிக்காத மனிதன் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ஆகஸ்ட் 2 முதல் வெளியானது. ஆனால் படம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லாததால், படம் வெளியான வேகத்தில் ஓடிடிக்கு வந்துவிட்டது.

விரைவில் திருமணம்: நடிகை மேகா ஆகாஷ் தன்னுடைய நீண்ட நாள் காதலனான சாய் விஷ்ணுவை திருமணம் செய்து கொள்ள உள்ளார். இவர்களின் நிச்சயதார்த்தம் கோவளம் நித்ய பெருமாள் கோயில் அருகே உள்ள திருமண மண்டபத்தில் நேற்று மிகவும் எளிமையாக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. அந்த போட்டோக்கள் தற்போது இணையத்தில் பரவியதை அடுத்து ரசிகர்கள் பலரும் மேகா ஆகாஷிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











