இதுதான் அந்த ரகசியமாமே..? வித்தியாசக் கதையில்.. தன் அம்மா இயக்கத்தில் நடித்துள்ள பிரபல ஹீரோயின்!

By

சென்னை: நடிகை மேகா ஆகாஷ், குறும்படம் ஒன்றில் நடித்துள்ளார். இதை அவர் அம்மா இயக்கி இருக்கிறார்.

ரஜினிகாந்த் நடித்த பேட்ட, சிம்பு நடித்த வந்தா ராஜாவாதான் வருவேன் படங்களில் நடித்தவர், மேகா ஆகாஷ்.

தெலுங்கில், லை என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான இவர், தமிழ், தெலுங்கு, இந்தியில் நடித்து வருகிறார்.

மேகாவும் பேசப்பட்டார்

மேகாவும் பேசப்பட்டார்

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷுடன் இவர் நடித்த எனை நோக்கி பாயும் தோட்டா, இவரை இன்னும் பிரபலமாக்கியது. இந்தப் படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டானதால், மேகாவும் பேசப்பட்டார். அடுத்து விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தில் அவர் ஜோடியாக நடித்துள்ளார்.

சல்மான்கானின் ராதே

சல்மான்கானின் ராதே

இந்தியில், சூரஜ் பஞ்சோலி ஜோடியாக, 'சேட்டிலைட் சங்கர்' என்ற படத்தில் நடித்த மேகா ஆகாஷ், இப்போது பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் ராதே படத்திலும் நடித்து வருகிறார். திஷா பதானி, ரன்தீப் ஹுடா, ஜாக்கி ஷெராப், தமிழ் ஹீரோ பரத் உட்பட பலர் இதில் நடிக்கின்றனர்.

அதை யூகியுங்கள்

அதை யூகியுங்கள்

இந்நிலையில், இவர் தனது ட்விட்டர் பக்கத்தில், எனது அடுத்த படம் என்ன என்று யூகியுங்கள் என்று கூறியிருந்தார். இதையடுத்து அவருடைய அடுத்த படம் பற்றிய தகவல் வெளியாக இருப்பதாக, ரசிகர்கள் நினைத்தனர். அது என்ன என்று தெரிவிக்கும்படி ரசிகர்களும் கேட்டு வந்தனர். ஆனால் அவர் ரகசியம் காத்து வந்தார்.

அம்மா இயக்கத்தில்

அம்மா இயக்கத்தில்

இந்நிலையில், அவர் குறும்படம் ஒன்றில் நடித்துள்ளார். அதுபற்றிய தகவலைதான் அவர் அப்படிக் கூறியுள்ளார். அந்தப் படத்தை இயக்கி இருப்பது மேகா ஆகாஷின் அம்மா பிந்து. இவர் ஏராளமான விளம்பர படங்களை இயக்கி இருக்கிறார். இப்போது அம்மா இயக்கத்தில் மகள் நடித்திருக்கிறார். இந்தக் குறும்படத்துக்கு கோபி சுந்தர் இசை அமைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X