வெண்பனி மலர் மேகா ஆகாஷ் அழகிய புகைப்படங்கள்!

சென்னை: தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக க்யூட்டான நடிப்பை வெளிக் காட்டி ரசிகர்களை கொண்டவர் நடிகை மேகா ஆகாஷ்

தமிழை த் தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் இவர் பல படங்களில் நடித்து வருகிறார்

விஜய் சேதுபதியுடன் இணைந்து யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற படத்தில் நடித்து வரும் மேகா ஆகாஷ் இப்பொழுது வெண் பனி மலர் போல் பளிச்சிடும் அழகிய புகைப்படங்களை சமுக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்

மீண்டும் நித்தின் ஜோடியாக

மீண்டும் நித்தின் ஜோடியாக

மிக சரளமாக தமிழ் பேச தெரிந்த தமிழ் நடிகையான மேகா ஆகாஷ் தெலுங்கில் வெளியான லை என்ற படத்தில் நடித்ததன் மூலம் முதல் முறையாக திரைத்துறைக்கு அறிமுகம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து மீண்டும் நித்தின் ஜோடியாக சல் மோகன் ரங்கா என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த நிலையில் தமிழ் சினிமாவிற்கு சூப்பர் ஸ்டாரின் பேட்ட திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகம் செய்யப்பட்டார்

ரசிகர்களுக்கு ஃபேவரிட் திரைப்படம்

ரசிகர்களுக்கு ஃபேவரிட் திரைப்படம்

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் துள்ளலான நடிப்பில் வெளியான பேட்ட அனைத்து ரசிகர்களையும் திருப்தி படுத்தியது குறிப்பாக ரஜினி ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் ஃபேவரிட்டாக அமைந்தது. இந்த படத்தில் மேகா ஆகாஷ் கல்லூரி மாணவியாக நடித்து அசத்தியிருப்பார். மிகப்பெரிய அறிமுகத்தைத் தொடர்ந்து தமிழில் இவருக்கு வந்தாராஜாவாதான் வருவேன், பூமராங் மற்றும் நீண்ட இழுபறிக்குப் பிறகு வெளியான எனை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட திரைப்படங்களாக மேகா ஆகாஷ் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றன

யாதும் ஊரே யாவரும் கேளிர்

யாதும் ஊரே யாவரும் கேளிர்

ஆனால் மேகாவுக்கு தமிழில் இதுவரை வெளியான எந்த ஒரு திரைப்படமும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கைகொடுக்கவில்லை இருப்பினும் தற்போது விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகிவரும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற படத்தில் நடித்து வருகிறார். யாதும் ஊரே யாவரும் கேளிர் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் மிக விரைவிலேயே வெளியாக உள்ளது.

Recommended Video

இந்த SCRIPT முன்னாடியே கேட்டிருந்தா பண்ணிருக்கமாட்டேன் | MEGHA AKASH CHAT PART - 01 | Filmibeat
வெண்பனி மலர் மேகா ஆகாஷ்

வெண்பனி மலர் மேகா ஆகாஷ்

தமிழைப் போலவே தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் இவருக்கு மிகப் பெரிய மார்க்கெட் இருந்து வருகிறது. அந்த வகையில் தெலுங்கு குர்துண்டா சீத்தாகளம், என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். மேலும் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒருசேர உருவாகிவரும் அக்டோபர் 31st லேடீஸ் நைட் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இளம் நடிகையாக இருந்த போதும் எந்த ஒரு படத்திலும் கவர்ச்சி காட்டாமல் க்யூட் நடிப்பை வெளிப்படுத்தி பெரும் ரசிகர்கள் கூட்டத்தை கொண்டுள்ள மேகா ஆகாஷ் இப்பொழுது வென் பனி மலர் போல பளிச்சிடும் அழகிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X