நடிகை மேக்னா ராஜ் 2வது திருமணமா?.. புகைப்படத்தை பகிர்ந்த நடிகை.. யார் அவர் தெரியுமா?
சென்னை: காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா போன்ற படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் மேக்னா ராஜ். தமிழில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். காதல் கணவரை இழந்து தனிமையில் வசித்து வரும் இவர் தற்போது இரண்டாவது திருமணம் செய்துகொள்ள இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. இதுகுறித்து அவர் அளித்திருக்கும் பதில்களையும் இதில் காணலாம்.
கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் மேக்னா ராஜ், தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளிலும் குறிப்பிட்ட சில படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்துள்ளார். குறிப்பாக தமிழில் வெளியான பொல்லாதவன், திமிரு படங்களின் கன்னட ரீமேக்கில் ஹீரோயினாக நடி்தது நல்ல பெயரை பெற்றுள்ளார். இந்நிலையில், நடிகர் அர்ஜூனின் தங்கச்சி பையனான சிரஞ்சீவி சர்ஜாவை மேக்னா ராஜ் கடந்த 2018ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். மேக்னா ராஜ் கர்ப்பமாக இருந்த போது சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பால் 2020ஆம் ஆண்டில் உயிரிழந்தார். இவரது மரணம் கன்னட திரையுலகை அதிர்ச்சியடைய வைத்தது.

மகன்: கணவனை இழந்த மேக்னா ராஜூவுக்கு ஒரு மகன் இருக்கிறான். மகன் பிறந்த நேரத்தில் எனக்கு மீண்டும் சிரஞ்சிவி கிடைத்து விட்டான் என்று சமூகவலைதளங்களில் பதிவிட்டார். அதேபோன்று தான் செய்யும் ஒவ்வொரு நிகழ்விலும் தனது கணவர் உறுதுணையாக இருப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார் மேக்னா ராஜ். கணவனை இழந்தாலும், மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். அண்மைையில் இவரது தந்தை சுந்தர் ராஜ் மேக்னா குறித்து பேசி கண்கலங்கினார்.
மேக்னாவின் தந்தை கண்ணீர்: மேக்னா பிறந்த பிறகு தான் எங்க கஷ்டம் எல்லாம் தீர்ந்தது. அவ எங்களுக்கு ஒரே செல்ல பொண்ணு சிரஞ்சீவி சர்ஜா சின்ன வயசுலயே இறந்த வேதனையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமா மீண்டு, திரும்ப நடிக்க வந்திருக்கா. அதற்கு, எல்லோருடைய சப்போர்ட்தான் காரணம். அவளைப் பழையபடி பார்க்கிறது சந்தோஷமா இருக்கு என சுந்தர் ராஜ் கண்ணீருடன் தெரிவித்திருந்தார். சிரஞ்சீவி இறந்து 4 வருடங்களை கடந்து விட்ட நிலையில், நடிகை மேக்னா ராஜ் இரண்டாவது திருமமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு மேக்னா ராஜ் தக்க பதிலடியும் கொடுத்திருக்கிறார்.

2வது திருமணம்?: மேக்னா ராஜ் 2வது திருமணம் குறித்த கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பதில் அளித்திருக்கிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ஒரு பதிவை போட்டுள்ளார். அதில், எத்தனை ஜென்மம் எடுத்தாலும் எனக்கு நீயே வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மேலும், சிரஞ்சீவி சர்ஜா தான் எனக்கு எப்போதும் கணவர் என்பதை மேக்னா ராஜ் தெளிவுப்படுத்திவிட்டார். இனி, அவரது வாழ்வில் வேறு எந்த நபருக்கும் இல்லை என்பதையும் புரியவைத்துவிட்டார். மகன் தான் அவரது உலகமாக இருக்கிறது.
நாளை பற்றி யோசனை இல்லை: மேலும், சிரஞ்சீவி இறந்த 1 வருடத்தில் 2வது திருமணம் குறித்து இதேபோன்ற வதந்தி செய்திகள் வெளியாகின. அப்போதும் மேக்னா ராஜ் அளித்த பதில், "கணவர் இறந்த பின்பு, குழந்தையை வளர்ப்பது மற்றும் அவன் எதிர்காலம் பற்றி சிந்தித்து வருகிறேன். ஒரு கூட்டம் 2-வது திருமணம் செய்ய சொல்கிறது. சிலர், உங்கள் மகனுடன் மகிழ்ச்சியாக இருங்கள் என்கிறார்கள். நான் எதைக் கேட்பது? நான் அந்த கேள்வியை என்னிடம் இன்னும் கேட்கவில்லை. இந்த தருணத்தை வாழ்ந்துவிட வேண்டும் என்று என் கணவர் சொல்வார். அதனால் நாளை பற்றி யோசிப்பதில்லை" என்று தெரிவித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











