13 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜெயிலர் 2வில் ரீ- என்ட்ரி கொடுத்த அந்த நடிகை.. யாருக்கு ஜோடி தெரியுமா?

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் ஜெயிலர் 2. இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. படம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள நிலையில், படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. இந்நிலையில் படம் குறித்து தற்போது வெளியாகி உள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது, பிரபல நடிகை ஒருவர் 13 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தமிழில் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கிறார்.

ஜெயிலர் படம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது 2023 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படம் ஜெயிலர். அனிருத் இசையிலும், நெல்சன் திலீப்குமாரின் அட்டகாசமான இயக்கத்திலும் வெளியான இந்த படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது. படத்தில் மோகன் லால், சிவ ராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தார்கள். ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, தமன்னா, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தார்கள். மேலும், படத்தில் வில்லனாக மலையாள நடிகர் விநாயகன் நடித்திருந்தார்.

Actress Meghana Raj Re-Entry in Tamil Cinema After 13 Years She Joins Superstar Rajinikanth Jailer 2
Photo Credit:

படத்தில் பாடல்கள் அனைத்தும் செம ஹிட் அடித்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு வைக்கப்பட்டிருந்த மாஸான காட்சிகள் தியேட்டரில் மிகப்பெரிய ஹிட் அடித்தது. படம் பட்டையைக் கிளப்பியது. இப்படி இருக்கும்போது இந்த படத்தின் இரண்டாவது பாகம் உருவாகிறது என்று தகவல் வெளியானதும் ரசிகர்கள் உற்சாக மடைந்தனர். இப்படி இருக்கையில் இரண்டாவது பாகம் கடந்த சில மாதங்களாகவே படமாக்கப்பட்டு வருகிறது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் அனைத்தும் கேரளாவிலும் கோவாவிலும் படமாக்கப்படுவதாக தகவல்கள் வெளியானது.

அன்புள்ள சந்தியா மேக்னா ராஜ்: படத்தில் எஸ்.ஜே. சூர்யாவும் நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியானது. மேலும் அவருக்கு முக்கியமான கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இப்படி இருக்கையில் படத்தில் மற்றொரு நடிகை கமிட் ஆகியுள்ளாராம். அதாவது இந்த நடிகை ஏற்கனவே தமிழில் நடித்து, அதன் பின்னர் 13 ஆண்டு காலம் தமிழ் சினிமாவில் நடிக்காமல் கன்னட சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வந்துள்ளார். அதாவது நடிகை மேக்னா ராஜ் ஜெயிலர் 2 படத்தில் கமிட் ஆகியுள்ளார். இவர் ஏற்கனவே 2010ஆம் ஆண்டு காதல் சொல்ல வந்தேன் படத்தில் அறிமுகமானார். இந்த படத்தில் இடம் பெற்ற அன்புள்ள சந்தியா பாடல் இவரை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்த்தது.

Actress Meghana Raj Re-Entry in Tamil Cinema After 13 Years She Joins Superstar Rajinikanth Jailer 2
Photo Credit:

ரீ என்ட்ரி: அதன் பின்னர்,உயர் திரு 420. நந்தா நந்திதா உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதில் நந்தா நந்திதா படம் தமிழில் அவரது கடைசி படம். இந்த படம் 2012ஆம் ஆண்டு வெளியானது. அதன் பின்னர் இவர் தமிழில் நடிக்கவில்லை. கன்னட படத்தில் தான் அதிகம் கவனம் செலுத்தினார். இப்படி இருக்கும்போது, இவர் மீண்டும் தமிழில் ஜெயிலர் 2 படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார். இந்த படத்தில் அவர் எஸ்.ஜே. சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளாரா அல்லது சிவ ராஜ்குமாருக்கு ஜோடியாக நடிக்கிறாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X