கணவனை பறிகொடுத்த மேக்னா ராஜ்..இரண்டாவது திருமணம் குறித்து மனம் திறந்த பேட்டி!
சென்னை : நடிகை மேக்னா ராஜ் இரண்டாவது திருமணம் குறித்து முதன் முதலாக மனம் திறந்து பேசியுள்ளார்.
Recommended Video
நடிகை மேக்னா ராஜூம் கன்னட நடிகரான சிரஞ்சீவி சர்ஜாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தார்கள். இதையடுத்து, 2018ம் ஆண்டு இரு வீட்டாரின் சம்மதத்துடன் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
திருமணத்துக்குப் பிறகும் நடிகை மேக்னா ராஜ் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தார்.மறைந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜா இதுவரை 22 படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 'ஷிவார்ஜுனா' என்ற படத்தில் நடித்து இருந்தார்.

சிரஞ்சீவி சர்ஜா
கடந்த 2020ஆம் ஆண்டு சிரஞ்சீவி சர்ஜா தனது வீட்டில் குடும்பத்தினருடன் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.39 வயதே ஆன சிரஞ்சீவி சர்ஜா உயிரிழந்தது கன்னட திரையில் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சிரஞ்சீவி சர்ஜா இறந்த போது அவரது மனைவி மேக்னா ராஜ் 7 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

ஆண் குழந்தை
அதே ஆண்டே மேக்னாவிற்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. ஜூனியர் சிரஞ்சீவிக்கு ராயன் ராஜ் சர்ஜா என பெயர் வைத்துள்ளார். கணவர் சிரஞ்சீவி சர்ஜாவின் துயரத்தில் ஆழ்ந்து இருந்த மேக்னா தனது மகனை பார்த்து ஆறுதல் அடைந்து வருகிறார். அப்போது, தனது கணவரின் புகைப்படத்தை பகிர்ந்து கண்ணீர் வடித்து வந்தார்.

2வது திருமணமா?
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார் நடிகை மேக்னா ராஜிடம் இரண்டாவது திருமணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு, பதிலளித்த மேக்னா, சிலர் என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்கிறார்கள், சிலர் உங்கள் மகனுடன் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்கிறார்கள், அப்படியானால் நான் யாருடைய பேச்சை கேட்க வேண்டும்.

வாழ்க்கை எப்படி இருக்கும்
உலகம் என்ன சொன்னாலும் உன் மனது என்ன சொல்லுகிறதோ அதை கேட்டு முடிவு எடுக்க வேண்டுமேன சிரஞ்சீவி எப்போதும் சொல்வார். இரண்டாவது திருமணம் செய்து கொள்வது பற்றி நான் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. நாளை என்ன நடக்கும் என்று நான் நினைக்கவில்லை. அல்லது இரண்டு நாட்களுக்குப் பிறகு என் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று நான் யோசிக்கவில்லை. எனது மகனுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்து கொடுக்க வேண்டும். அதுவே எனக்கு விருப்பம் என்றார்.


Click it and Unblock the Notifications











