மறைந்த கணவரின் ஆசையை நிறைவேற்றிய நடிகை.. இன்ஸ்டாவில் உருக்கமான பதிவு!
சென்னை: நடிகை மேக்னா ராஜ் தமிழில் காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் போது காதல் கணவரை பறிகொடுத்த இவர், தனது கணவரின் ஆசையை நிறைவேற்றி உள்ளார்.
நடிகை மேக்னா ராஜூம் கன்னட நடிகரான சிரஞ்சீவி சர்ஜாவும் பல ஆண்டுகளாக காதலித்து 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. நடிகை மேக்னா ராஜ் கர்ப்பாக இருக்கும் நிலையில்,
கடந்த 2020ஆம் ஆண்டு சிரஞ்சீவி சர்ஜா திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 39 வயதே ஆன சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பால் உயிரிழந்தது கன்னட திரை உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

நடிகை மோக்னா ராஜ்: சிரஞ்சீவி சர்ஜா இறந்த போது 7 மாத கர்ப்பிணியாக இருந்த மேக்னா ராஜூக்கு அதே ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ராயன் ராஜ் சர்ஜா என பெயர் வைத்துள்ளார். கணவர் சிரஞ்சீவி சர்ஜாவின் துயரத்தில் இருந்து மீண்டு வராமல் இருந்த மேக்னா மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். மேக்னா, குழந்தைக்காக இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என பலர் சொன்ன போதும், இரண்டாம் திருமணம் வேண்டாம் என்கிற முடிவில் உறுதியாக இருந்து தனது மகனை வளர்ந்து வருகிறார்.
நம் இருவரின் கனவு: இந்நிலையில், மேக்னா ராஜ், 'ஜெயிலர் 2' படத்தில் நடிப்பதாகத் தகவல் வெளியான நிலையில் அதை உறுதிப்படுத்தும் விதமாக, படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். அதில், எனது கணவர் சிரஞ்சீவி சார்ஜா ரஜினிகாந்தின் தீவிர ரசிகர். எப்படியாவது, அவரது படத்தில் நடித்துவிட வேண்டும் என்பது அவரின் கனவு. நாம் இருவரும் இணைந்து ஒரு காலத்தில் கண்ட கனவை, இன்று நான் நிறைவேற்றி இருக்கிறேன். இந்த வெற்றி, இந்த மைல்கல் உனக்கே சொந்தமானவை. நான் கனவிலும் நினைத்திராது இன்று நிகழ்ந்துள்ளது. அவரை சந்திக்கும் வாய்ப்பை நீயே எனக்கு ஏற்படுத்திக் கொடுத்தாய் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications