கணவர் மரணத்தில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் நடிகை.. பிரண்ட்ஸுடன் அவுட்டிங்.. கலக்கல் போட்டோஸ்!

சென்னை: கணவர் மரணத்தில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறார் நடிகை மேக்னா ராஜ்.

பிரபல கன்னட நடிகை மேக்னா ராஜ். இவர் சினிமா குடும்பத்தை சேர்ந்தவர்.

கன்னட நடிகர் சுந்தர் ராஜ் - நடிகை பிரமிளா ஜோஷாயின் ஒரே மகள் ஆவார். மேக்னா ராஜ் தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார்.

பிரபல நடிகர் சிரஞ்சீவி சர்ஜா

பிரபல நடிகர் சிரஞ்சீவி சர்ஜா

அதாவது, காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமாகியுள்ளார் மேக்னா ராஜ். மேக்னா ராஜும் கன்னட சினிமாத்துறையில் பிரபல நடிகராக வலம் வந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜா கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

சினிமா குடும்பம்

சினிமா குடும்பம்

இவர்கள் இருவரும் 10 ஆண்டுகள் காதலித்து வந்தனர். நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவும் சினிமா குடும்பத்தை சேர்ந்தவர்தான். நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜூனின் அக்காள் மகன் ஆவார். இவரது தம்பி துருவா சர்ஜாவும் கன்னட சினிமாவில் பிரபல நடிகர் ஆவார். சிரஞ்சீவி சர்ஜாவின் தாத்தாவும் பிரபல நடிகராக இருந்தவர்.

கார்டியாக் அரெஸ்ட்டால் மரணம்

கார்டியாக் அரெஸ்ட்டால் மரணம்

சிரஞ்சீவி சர்ஜா மற்றும் மேக்னா ராஜின் திருமணம் கிறிஸ்தவ முறைப்படியும் பின்னர் இந்து முறைப்படியும் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிரஞ்சீவி சர்ஜா கடுமையான கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு மரணமடைந்தார்.

உலுக்கிய சிருவின் மரணம்

உலுக்கிய சிருவின் மரணம்

இருவரும் முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருந்தனர். மேக்னா ராஜ் 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். அப்போதுதான் இந்த துயர சம்பவம் நடந்தது. சிரஞ்சீவி சர்ஜாவின் மரணம் கன்னட திரைத்துறை மட்டுமின்றி ஒட்டு மொத்த சினிமாத் துறையையும் உலுக்கியது.

ஜூனியர் சிரு என கொண்டாட்டம்

ஜூனியர் சிரு என கொண்டாட்டம்

சிரஞ்சீவி சர்ஜா இறந்து 5 மாதங்கள் கழித்து மேக்னா ராஜ்க்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. சிருவே மீண்டும் பிறந்து வந்துவிட்டதாக குடும்பத்தினர் கொண்டாடி வருகின்றனர். கணவர் மரணத்திற்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ளார் நடிகை மேக்னா ராஜ்.

மேக்னா ராஜின் புதிய ஹேர் ஸ்டைல்

மேக்னா ராஜின் புதிய ஹேர் ஸ்டைல்

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள மேக்னா ராஜ், அவ்வப்போது தனது போட்டோக்களையும் தனது கணவர் மற்றும் மகனின் போட்டோக்களையும் ஷேர் செய்து வருகிறார். அண்மையில் தான் ஹேர் கட் செய்த போட்டோக்களை ஷேர் செய்தார் மேக்னா ராஜ். இந்நிலையில் மேலும் சில போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் மேக்னா ராஜ்.

ஜூனியர் சிருவுக்கு கிருஷ்ணர் வேடம்

ஜூனியர் சிருவுக்கு கிருஷ்ணர் வேடம்

இதனை தொடர்ந்து கோகுலாஷ்டமியை முன்னிட்டு ஜூனியர் சிருவுக்கு கிருஷ்ணர் வேடமிட்டு அந்த போட்டோவையும் இணையத்தில் ஷேர் செய்திருந்தார் மேக்னா ராஜ். எப்போதும் தன் மகனுக்கு கிருஷ்ணர் போலவே டிரெஸ் செய்து பார்க்க வேண்டும் என ஆசைப்படுவதாக கூறியிருந்தார் மேக்னா ராஜ்.

நெருங்கிய தோழியுடன் அவுட்டிங்

நெருங்கிய தோழியுடன் அவுட்டிங்

இந்நிலையில் தனது நெருங்கிய தோழியான லாஸ்யா உமேஷூடன் வெளியில் சென்றுள்ளார் மேக்னா ராஜ். இன்ட்டீரியர் டிசைனரான லாஸ்யா உமேஷுடன் எடுத்த செல்பியையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் மேக்னா ராஜ். மேலும் தான் அணிந்துள்ள அணிகலன்களையும் க்ளோஸப்பில் காட்டி போட்டோ வெளியிட்டுள்ளார் மேக்னா ராஜ்.

ஒரே மாதிரி உடை அணிந்து

ஒரே மாதிரி உடை அணிந்து

இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் க்யூட், பியூட்டிஃபுல் என கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர். மேலும் தானும் தனது மகனும் ஒரே மாதிரி உடை அணிந்து அந்த போட்டோக்களையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோக்களும் லைக்ஸ்களை குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X