கணவர் மரணத்திற்கு பிறகு முதல் முறையாக ஹேர் ஸ்டைலை மாற்றிய நடிகை.. தீயாய் பரவும் போட்டோஸ்!
சென்னை: கணவர் மரணத்திற்கு பிறகு நடிகை மேக்னா ராஜ் முதல் முறையாக ஹேர் கட் செய்து ஹேர் ஸ்டைலை மாற்றியுள்ளார்.
கன்னட சினிமாத்துறையில் பிரபல நடிகராக வலம் வந்தவர் நடிகர் சிரஞ்சீவி சர்ஜா. சினிமா குடும்பத்தை சேர்ந்த இவர் ஆக்ஷன் கிங் அர்ஜூனின் அக்காள் மகன் ஆவார்.
இவரது மனைவி மேக்னா ராஜ். இவர்கள் 2 பேரும் 10 ஆண்டுகள் காதலித்து கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

தமிழில் நடித்துள்ள மேக்னா ராஜ்
மேக்னா ராஜூம் சினிமா குடும்பத்தை சேர்ந்தவர். கன்னட நடிகர் சுந்தர் ராஜ் - நடிகை பிரமிளா ஜோஷாயின் ஒரே மகள் ஆவார். மேக்னா ராஜ் தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். அதாவது, காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

சிரு - மேக்னா பொருத்தமான ஜோடி
அவர்களின் திருமணம் கிறிஸ்தவ முறைப்படியும் பின்னர் இந்து முறைப்படியும் நடந்து முடிந்தது. மேக்னா ராஜூம் சிரஞ்சீவி சர்ஜாவும் பொருத்தமான ஜோடியாக வலம் வந்தனர். இருவரும் இணைந்து ஒரு படத்திலும் நடித்தனர்.

கார்டியாக் அரெஸ்ட்டால் சிரு மரணம்
இருவரும் முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருந்தனர். மேக்னா ராஜ் 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். அப்போதுதான் கடுமையான கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு அகால மரணமடைந்தார் சிரஞ்சீவி சர்ஜா. அவரது மரணம் கன்னட திரைத்துறை மட்டுமின்றி ஒட்டு மொத்த சினிமாத் துறையையும் உலுக்கியது.

5 மாதங்கள் கழித்து ஜூனியர் சிரு
சிரஞ்சீவி சர்ஜா இறந்து 5 மாதங்கள் கழித்து மேக்னா ராஜ்க்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. சிருவே மீண்டும் பிறந்து வந்துவிட்டதாக குடும்பத்தினர் கொண்டாடி வருகின்றனர்.கணவர் மரணத்திற்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ளார் நடிகை மேக்னா ராஜ்.

மேக்னா ராஜின் புதிய ஹேர் ஸ்டைல்
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள மேக்னா ராஜ், அவ்வப்போது தனது போட்டோக்களையும் தனது கணவர் மற்றும் மகனின் போட்டோக்களையும் ஷேர் செய்து வருகிறார். இந்நிலையில் தனது புதிய ஹேர் ஸ்டைல் போட்டோவை ஷேர் செய்துள்ளார் மேக்னா ராஜ்.

தோள் பட்டை வரை வெட்டி
நீளமான தனது முடியை தோள் பட்டை வரை வெட்டி விட்டு பராமரிக்க எளிதாக மாற்றியுள்ளார் மேக்னா ராஜ். தனது புதிய ஹேர் கட்டில் ஹேரை லூசாக விட்டு பிங்க் நிற சுடிதாரில் குறைந்தளவு மேக்கப்புடன் போஸ் கொடுத்துள்ளார் நடிகை மேக்னா ராஜ். அவரது இந்த போட்டோவை அவரது நெருங்கிய தோழியான வித்யாஸ்ரீ ராவ் எடுத்துள்ளார்.

க்யூட் லுக்கில் உள்ள மேக்னா ராஜ்
அண்மையில் தனது 10 மாத மகனான ஜூனியர் சிருவுடன், எடுத்த போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்திருந்தார் மேக்னா ராஜ். தற்போது மேக்னா ராஜ் ஷேர் செய்துள்ள போட்டோக்களில் செம க்யூட்டாக உள்ளார். அவரது போட்டோக்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.


Click it and Unblock the Notifications











