திருமணத்தை நிறுத்தியது இதற்காகதானா? தனுஷ் பட நடிகை ஷேர் செய்த போட்டோ.. ஜெர்க்கான நெட்டிசன்ஸ்!

சென்னை: நடிகை மெஹ்ரீன் பிர்ஸடா ஷேர் செய்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் திருமணத்தை நிறுத்தியது இதற்காகதானா என கேட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் நெஞ்சில் துணிவிருந்தால் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை மெஹ்ரீன் பிர்ஸடா.

தொடர்ந்து நோட்டா மற்றும் தனுஷின் பட்டாசு படத்திலும் நடித்துள்ளார் மெஹ்ரீன். மேலும் தெலுங்கு, இந்தி மற்றும் பஞ்சாபி மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

இரண்டு தெலுங்கு படங்களில் மெஹ்ரீன்

இரண்டு தெலுங்கு படங்களில் மெஹ்ரீன்

தற்போது, எஃப் 3 என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார் நடிகை மெஹ்ரீன். மேலும் அவரது நடிப்பில் மஞ்சி ரோஜுலு வச்சாய் என்ற தெலுங்கு படம் ரிலீஸஜுக்கு தயாராக உள்ளது.

அரசியல்வாதி மகனுடன் திருமண நிச்சயம்

அரசியல்வாதி மகனுடன் திருமண நிச்சயம்

இந்நிலையில் கடந்த சில மார்ச் மாதம் நடிகை மெஹ்ரீன் பிர்ஸடாவுக்கு அரசியல்வாதி மகன் ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதாவது ஹரியானாவின் முன்னாள் முதல்வர் பஜன் லாலின் பேரன் பவ்யா பிஷ்னோய் உடன் மெஹ்ரீன் பிர்ஸடாவுக்கு திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டது.

ஜெய்ப்பூர் அரண்மனையில் திருமண நிச்சயம்

ஜெய்ப்பூர் அரண்மனையில் திருமண நிச்சயம்

ஜெய்ப்பூர் அரண்மனையில் கடந்த மார்ச் 11ஆம் தேதி இவர்களின் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகளும் கோலாகலமாக நடைபெற்றது.

மே மாதம் திருமணம் செய்ய முடிவு

மே மாதம் திருமணம் செய்ய முடிவு

திருமணத்திற்கு முந்தைய வைபவமான நிச்சயதார்த்த போட்டோக்கள் இணைய தளத்தில் வெளியாகி வைரலானது. இதனை தொடர்ந்து மெஹ்ரீனுக்கு மே மாதம் திருமணம் நடைபெறும் என தகவல் வெளியானது.

நடிகைக்கு கொரோனா - தள்ளிப்போன திருமணம்

நடிகைக்கு கொரோனா - தள்ளிப்போன திருமணம்

திருமணத்திற்கான ஏற்பாடுகள் கோலாகலமாக நடைபெற்று வந்தன. இந்நிலையில் நடிகை மெஹ்ரினுக்கும் அவரது அம்மாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் திருமணத்தை தள்ளி வைக்க குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

தள்ளி வைக்க முடிவு - நடிகை அறிவிப்பு

தள்ளி வைக்க முடிவு - நடிகை அறிவிப்பு

இதுதொடர்பாக தெரிவித்த மெஹ்ரீன் பிர்ஸடா, கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் இந்த நேரத்தில் திருமணத்தை நடத்துவது பாதுகாப்பாக இருக்காது என்றார். மேலும் அடுத்த ஆண்டுக்கு திருமணத்தை தள்ளி வைக்க யோசித்து வருவதாகவும் கூறினார்.

நிச்சயத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம்

நிச்சயத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம்

இந்நிலையில் சமீபத்தில் தனது திருமணம் நடைபெறாது

என தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்தார்.
அந்தப் பதிவில், "நானும் பாவ்யாவும் எங்களுடைய நிச்சயதார்த்தத்தை ரத்து செய்ய முடிவெடுத்துள்ளோம். இனி இந்த உறவை திருமணம் வரை கொண்டு செல்ல மாட்டேன். நானும் பாவ்யாவும் எந்த கருத்து வேறுபாடும் இல்லாமல் புரிதலோடு நட்புடன்தான் இம்முடிவை எடுத்திருக்கிறோம்.

எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள மாட்டேன்

எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள மாட்டேன்

பாவ்யாவுடனும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடனும் இனி எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளமாட்டேன். எதிர்காலத்தில் என் பணியில் மட்டுமே கவனம் செலுத்தப்போகிறேன்" என்று கூறியிருந்தார். மெஹ்ரீன் பிர்ஸடா திடீரென திருமணத்தை நிறுத்தியதற்கான காரணம் என்னவாக இருக்கும் என கேட்டு வந்தனர்.

கன்னட படத்தில் இணைந்த மெஹ்ரீன்

கன்னட படத்தில் இணைந்த மெஹ்ரீன்

இந்நிலையில் ரசிகர்களின் இந்த சந்தேகத்துக்கு பதில் அளிக்கும் வகையில் போட்டோ ஒன்றை ஷேர் செய்துள்ளார் மெஹ்ரீன் பிர்ஸடா. அதாவது மெஹ்ரீன் பிர்ஸடா கன்னட படத்தில் அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் ஷிவராஜ்குமாருக்கு ஜோடியாக நடிக்கிறார் மெஹ்ரீன் பிர்ஸடா.

க்ளாப் போர்டு அடித்த சுதீப்

க்ளாப் போர்டு அடித்த சுதீப்

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று க்ளாப் போர்டு அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். மேலும் படத்தின் பூஜை விழாவில் நடிகர் புனீத் குமார் பங்கேற்றார். நடிகர் ஷிவராஜ் குமாரின் மனைவி கீதா கேமராவை ஆன் செய்தார்.

கன்னடம் மற்றும் தெலுங்கில் ரிலீஸ்

கன்னடம் மற்றும் தெலுங்கில் ரிலீஸ்

இந்தப் படத்திற்கு நீ சிகுவாரேகு என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படம் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இப்படம் எமோஷனல் ரொமான்டிக் படமாக உருவாகிறது. இந்த படம் ஷிவராஜ்குமாரின் 124வது படமாகும்.

இதற்காகதான திருமணத்தை நிறுத்தினீர்களா?

இதற்காகதான திருமணத்தை நிறுத்தினீர்களா?

இந்தப் படத்தின் பூஜை போட்டோக்களையும் வீடியோக்களையும் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் இதற்காக தான் திருமணத்தை நிறுத்தினீர்களா என கேட்டு வருகின்றனர். மேலும் ரசிகர்கள் பலரும் அவருக்கும் படக்குழுவுக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X